மைசூரு – கொல்லேகால் சாலையில் 48 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் தலக்காடு. இங்கு வைத்தியநாதசுவாமி என்னும் பெயரில் சிவன் கோயில் கொண்டிருக்கிறார். இக்கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலை சிற்பக்கலைக்கு சவால் விடும் விதத்தில் உள்ளது. சுவாமி சன்னதியில் உள்ள இடதுபுற துவாரபாலகர் ‘பெண் கல்லால்’ ஆனவர். ஆண், பெண் என்ற பாகுபாடு கல்லுக்கும் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த துவாரபாலகரின் மார்பு, வயிறை மட்டும் பார்த்தால் பசுவின் முகம் போல தோன்றுகிறது. குச்சியால் தட்டி ஒலி எழுப்பினால் பெண் கல்லுக்குரிய நாதம் கேட்கிறது. இதை செதுக்கியவர் சிற்பி நாக குண்டல ஆச்சாரி.