சித்திரை முதல் சனிக்கிழமை; கனி அலங்காரத்தில் அருள்பாலித்த மருதூர் அனுமன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2025 05:04
கோவை; காரமடை அடுத்த மருதூரில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்னும் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா மிகச்சிறப்பாக நடைபெறும். சித்திரை மாத முதல் சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்பு மா, பலா,வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை,கொய்யா, திராட்சை, சப்போட்டா போன்ற 27 வகையான கனிகளால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. காரமடை சுற்றுப்பகுதியில் உள்ள பஜனை குழுவினரின் பஜனையும், அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.