பூதமங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2025 05:04
திருவண்ணாமலை; பூதமங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ரத பிரமோற்சவம் விழாவில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆதிகேசவ பெருமாள் கோவில். இங்கு ரத பிரமோற்சவம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.