சிவப்பெருமானுக்கு திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் சோமவார விரதம் என்று பெயர். சோமவார நாளில் இறைவனை வழிபடுவதால் பாவங்கள் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கும், எல்லா நற்பலன்களையும் சோமவார விரதம் தரும். விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம். சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப் பிடிக்கலாம். இதைத் தவிர சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமையில் தொடங்கலாம். வைகாசி சோமவாரமான இன்று ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து வாழ்வில் உயர்வடைவோம்.