நெட்டப்பாக்கம்: வடுககுப்பம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் பட்டாபிராமர் சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதையொட்டி ஜனகமகாராஜாவின் சீதனமாக வஸ்திரங்கள், பழவகை வரிசை தட்டு சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியர்களால் மாலை மாற்றும் வைபவம் நடந்தது.உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.