சுந்தரராஜ பெருமாளுக்கு கங்கை தீர்த்த அபிஷேகம்; நாளை கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2025 11:11
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைல காப்பு உற்ஸவத்தில் நுாபுர கங்கை தீர்த்தத்தில் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டாள் தனி சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் திருக்கோயிலில் நடக்கும் தைலக்காப்பு உற்ஸவம் போல் பரமக் குடியில் நடக்கிறது. நவ.,1 இரவு சயன திருக்கோலத்தில் பெருமாள் அருள் பாலித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நுாபுர கங்கை தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந் தருளிய பெருமாளுக்கு சகலவிதமான அபிஷேகங்கள் துாப தீப ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஊஞ்சல் சேவையில் அமர்ந்தார். நாளை இரவு கருட வாகனத்தில் புறப்பாடாகி, வீதி உலா கண்டு கோயிலை அடைவார். அப்போது பக்தர்களுக்கு தைலம் பிரசாதமாக வழங்கப்படும்.