மயிலாடுதுறையில் மணிவிழா; கோ பூஜை செய்து வழிபட்ட தருமபுரம் ஆதீனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2025 11:11
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் திருமடத்தின் 27 வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். குரு மகா சன்னிதானத்திற்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மணிவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 4ம் நாளான இன்று காலை குரு மகா சன்னிதானம் சொக்கநாதர் பூஜை முடித்த பின்னர் திருமடத்தின் வளாகத்தில் 60 பசுக்களுக்கு வஸ்திரம், மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோ பூஜை செய்தார். தொடர்ந்து தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து குரு துர்க்கை அம்மன் சன்னதியில் நடந்த நவ துர்கா ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டதுஇதில்குருமகாச நீர் நானும் கலந்து கொண்டு தரிசனம் செய்தார் தொடர்ந்து அவர் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதனை அடுத்து குரு மகா சன்னிதானம் கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஜ பூஜை , பஞ்ச கல்யாணி பூஜைகளை செய்து வழிபாடு நடத்தினார். பூஜையில் ஆதீன தம்பிரான்கள், மயிலாடுதுறை எம்.பி. சுதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக தருமபுரம் ஆதீன திருமடத்தில் வேத பாராயணம் மற்றும் திருமுறை முற்றோதல் நடைபெற்றது.