பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
12:04
சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று ,பங்குனி கடைசி வெள்ளிப்பெருந்திருவிழா நடைபெற்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு, அக்னிசட்டி, ஆயிரங்கண்பானை, முடிகாணிக்கை செலுத்தியும், உப்பு, நவதானியங்கள் தானம் வழங்கி வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே, அம்மனுக்கு இளநீர், பால், பன்னீர், மஞ்சள் பஞ்சாமிர்தம் என, பல்வேறு அபிஷேக பொருட்களால், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அந்தந்த கிராமத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், வருகைதந்த பக்தர்கள், பொங்கலிட்டு வழிபட்டு சென்றனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தபூஜாரி, இந்து சமய
அறநிலையத்துறை செயல்அலுவலர் தனபாலன் செய்தனர்.