மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2025 12:11
இடையகோட்டை: இடையகோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு முஸ்லிம் ஜமாத் சார்பில் மேளதாளங்கள் முழங்க தேங்காய், பழம், மாலை, பட்டாடைகள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினர். இடையகோட்டை ஜமீன்தார், கோயில் பரம்பரை சுவான்தார் சரவணன், விழா குழுவினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்து அன்பை பரி மாறிக் கொண்டனர். மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடந்த இந் நிகழ்ச்சி பொது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.