ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2025 01:11
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து க கடந்த அக்.31ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை,வாஸ்து சாந்தியுடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதனைத் தொடர்ந்து 4நாட்கள் 6 கால யாக சாலை மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று நேற்று காலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருமண பந்தலில் ஞானாம்பிகை அம்மனுடன் ராஜேந்திர சோழீஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினார்.முன்னதாக விநாயகர், முருகன் மற்றும் புனிதவதி அம்மையாருடன் மாறநாயனாரும் எழுந்தருளினர்.சிவாச்சாரியார்கள் ஹோமங்களை வளர்த்து பூஜைகளை செய்த பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய பிறகு வீதி உலா நடைபெற்றது. விழாவில் இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையான்குடி ஆயிர வைசிய சபையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.