திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சி, சாத்தங்குப்பம் கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் சுவாமி கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, கடந்த 1ம் தேதி மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி ஹோமம், கோபூஜைகளுடன் முதல்கால பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகளுடன், 10:30 மணிக்கு, கோவிலில் உள்ள அய்யப்பன் சுவாமிக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.