Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னி-புராணம் நிருதி புராணம்! நிருதி புராணம்!
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
எம புராணம்
எழுத்தின் அளவு:
எம புராணம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
05:06

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ஆனையின் படி அதைச் செய்து முடிப்பவன் யமன் எனப்படும் இயமன் என்பவனே யாவான். இவனைப் பற்றிப் பாமரரும் அறிவர். விஷ்ணுவின் அவதார புருசர்களான இராமர், க்ருஷ்ணர் முதலியவர்களும் இவனாலேயே இறுதிக் காலத்தை எய்தினர்.  இயமன் இருந்தாளும் பட்டிணம் சைய்மனி எனப்படும் யமபுரி ஆகும். இது பூமியினின்றும் 86,000 காத தூரத்திலுள்ளது. இவன் சூரியனுக்கும் (விவசசுவான்) சாயா தேவிக்கும் (சமுக்கை) பிறந்தவன். எருமையை ஊர்தியாக உடையவன்; யமுனை என்ற நதியைத் தங்கையாக உடையவன்; இவனது ஆயுதங்களோ தண்டம் பாசம், குடாரம், சுரிகை என்பவை. இவனது தேவி கால கண்டி எனப்படும் சாமளை ஆவாள். இவன் ஓள தும்பரன் சண்டாமிருகன், சம்பரன், சார்த்தூலன் என்ற நால்வரைத் தூதராகக் கொண்டவன்.

இவன், இறைவன் ஆணையால் உயிர்களை அவர்கள் செய்த பாப-புண்ணியங்களுக்குப் பரிசாக காலமுடிவில் (இறப்பிற்குப் பிறகு) சுவர்க்க நரகங்களை அனுபவிக்கச் செய்பவன். காலகதி அடைந்த உயிர்களைப் பற்றிய விவரத்தை தனது உதவியாளனான சித்ர குப்தன் என்ற கணக்கன் மூலம் அறிந்து தனது பணியாளர்களான யமகிங்கரர் எனப்படும் தூதுவர் மூலம் கொண்டு வரச் செய்வான். சித்ரகுப்தன் என்ற கணக்கனோ, தனக்கு உதவியாளர்களாகப் பிரமனால் படைக்கப்பட்ட பன்னிரண்டு சிரவணர் மூலம் உயிர்களின் மணம் வாக்கு காயத்தால் செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் அறிந்து அதற்குரிய பலனை இயமனுக்கு அறிவிப்பான். சிரவணர் என்போர், நமது ஆன்மா வோடு ஒன்றியிருந்து, அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள். மனிதனானவன் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்த பாவ புண்ணியங்களை உடலாலும், மனத்தால் செய்த பாவ புண்ணியங்களை மனத்தாலும் அனுபவிப்பான்.

இயமன், தட்சனுக்கும், பிரசூதிக்கும் பிறந்த சுவாகாதேவி என்பவள் மீது காதல் கொண்டு, அவளை மணந்தனன். என்றாலும், அவளை ஒரு எலுமிச்சம் பழமாக்கி விழுங்கி வேண்டும் போது வெளிப்படுத்தி இன்பம் அனுப்பவிப்பான். மீண்டும் பழமாக்கி விழுங்கிவிடுவான். இப்படியிருக்கையில் ஒரு முறை நந்தவனம் ஒன்றில் இவளை வெளிப்படுத்தி, இன்பம் அனுபவித்த பின்பு அயர்ச்சியில் துயின்றனன். அது போது, அவ்வழியே வந்த அக்னிதேவனைச் சுவாகா தேவி கண்டனள், காதலும் கொண்டனள். இருவரும் இன்பம் துய்த்தனர். இறுதியில், சுவாகா தேவியோ, அக்னியை எலுமிச்சம் பழ உருவாக்கித்தான் இயமனைப் போல் விழுங்கி விட்டனள். இயமனோ வழக்கம் போல் சுவாகாதேவியைப் பழமாக்கி விழுங்கி விட்டனன். இவ்வாறாக ஒருவருக்குள் ஒருவராக வாழ்ந்து வந்தனர். அக்னியின் செயல் ஒழிந்தது. உயிர்கள் வருந்தின. யாக காரியங்கள் நின்றன. மக்களும் தேவர்களும் துன்புற்றனர்.

இதை அறிந்த விஷ்ணு யமதர்மனிடம் வந்து ஸ்வாஹா தேவியை வெளியில் விடச் செய்தனன். அதைப் போலவே, சுவாகா தேவியை அக்னியை வெளியில் கொண்டு வரப் பணித்தார். எங்கும் அக்னியின் செயல் தொடங்கியது. யமன் சுவாகாதேவியை விரும்பி அடைந்திருந்தாலும். சுவாகா தேவியோ அக்னியை விரும்பிய காரணத்தால், அவனுக்கே அவள் உரியவள் என்று கருதி. அக்னிக்கே சுவாகா தேவியை விஷ்ணு அளித்து விட்டனன். அது முதல் கொண்டே சுவாகா, அக்னி தேவியானாள். எமதர்ம ராசனுடைய அரண்மனையின் ஒரு பக்கத்தில் இருபத்தைந்து யோசனை உயரத்தில் சித்ரகுப்தனுடைய அரண்மனை அமைந்திருக்கும் அங்கிருந்தே அவன் மக்கள் விதியை நிர்ணயிப்பான். காலதேவனால் பாவஞ் செய்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட நரகலோகங்கள் கணக்கில் அடங்காதவை. என்றாலும், அவற்றுள் தாமிஸ்ரம் முதலிய 28 நரக லோகங்கள் குறிப்பிடத்தக்கவை.

மனிதன் உயிர் இழந்த பின்பு அவ்வுயிர், பிரேத ஜன்மம் என்ற நிலையை அடையும். அதைப் போக்கிக் கொள்ள விருசோற்சனம் என்ற சடங்குகளைச் செய்ய வேண்டும்.  சிரசு முதல் பாதம் வரை சுடு காட்டில் தேகம் எல்லாம் வெந்து சாம்பலான உடனே ஜீவனுக்கு பிண்டத்தால் ஆன சரீரம் உண்டாகின்றது. எனவே தான், இறுதிச் சடங்கின் போது பிண்டம் போடுகின்றோம். எமதர்மன் தானாக எதையும் செய்வதில்லை. நாம் செய்த பாவ புண்ணியங்களின் படியே பலன் அளிக்கிறான். என்பதை உணர்தல் நலம்.

எம பூஜா சங்கிரகம்

1. ஆசனமூர்த்தி மூலம்:

1. ஓம்-ஹாம்-யம-ஆசனாய நம;
2. ஓம்-ஹாம்-யம்-யமமூர்த்தயே நம;
3. ஓம்-ஹாம்-யம்-காலகண்டி சகிதாய இயமனே நம;

2. காயத்ரி:

ஓம் வைரவஸ்தாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி
தந்நோ யம: ப்ரசோதயாத்

3. தியான சுலோகம்:

க்ருதாந்தம் மஹிஷாரூடம்
தண்ட ஹஸ்தம் பயானகம்
கால பாசதரம் க்ருஷ்ணம்
த்யாயேத் தக்ஷிண திக்பதிம்

4. மூல மந்திரம்:

ஓம்-ஹாம்-யம்-காலகண்டி சகிதாய
தண்ட ஹஸ்தாய யமநாய நம;

5. துதி:

கருநிற வடிவம் கொண்டு
கரத்தினில் தண்டம் பாசம்
அபயம் வரதம் பூண்ட
எருமை ஊர் இயமனை
வாழ்த்தி வணங்கு வாம்

6. பிரார்த்தனை

மகிஷா ரூட: க்ருஷ்ணவர்ண தேக; பாச
தண்டஹஸ்த காலகண்ட ஸகிதாய யம ஆன்
மார்த்த, பரார்த்த, கும்பாபிஷேக பூஜா க்ரியாயாம்
சர்வ மங்கள சித்திம் அநுக்ர ஹாணாம்.

எம அஷ்ட சத அர்ச்சனா 108

குறிப்பு:  இந்திர அஷ்ட சத அர்ச்சனாவில் கூறியுள்ள, முறையைப் பின்பற்றுக.

1. ஓம் யமதர்ம ராஜாய நம;
2. ஓம் சூர்ய புத்ராய நம;
3. ஓம் சம்ஞாகர் பசமுத்பவாய நம;
4. ஓம் தர் மிஷ்டாய நம;
5. ஓம் சாந்த ரூபாய நம;
6. ஓம் துர்சநாவபிசிக்ஷகாய நம;
7. ஓம் புண்ய யுத்காய நம;
8. ஓம் அபி கந்தரே நம;
9. ஓம் தத்வத் ருஷ்டயே நம;
10. ஓம் க்ரு சோத்ராய நம;
11. ஓம் தர்ம ஸ்வரூணே நம;
12. ஓம் யம ராஜனே நம;
13. ஓம் சர்பூத பயங்கராய நம;
14. ஓம் தீர்க்க ரூபாய நம;
15. ஓம் மகா காயாய நம;
16. ஓம் சாது சந்தோச தாயகாய நம;
17. ஓம் விஷ்ணு பக்தாய நம;
18. ஓம் சின்ன ராய நம;
19. ஓம் ச மாய நம;
20. ஓம் சம்யம நீச்வராய நம;
21. ஓம் விசால நயநாய நம;
22. ஓம் பாதிகோதண்டிநே நம;
23. ஓம் தண்டிய தண்டகாய நம;
24. ஓம் வசனாம்ருத தாயிநே நம;
25. ஓம் ப்ருகுடீ பூசாக்ருதயே நம;
26. ஓம் ப்ராணி சம்ஹாரக்ருதே நம;
27. ஓம் சண்டாய நம;
28. ஓம் திவ்ய ஞானப் ப்ரகாசகாய நம;
29. ஓம் க்ருபா நிதயே நம;
30. ஓம் சாது ரச்காய நம;
31. ஓம் காலதண்ட வராயுதாய நம;
32. ஓம் சர்வ வேதாந்த வேதினே நம;
33. ஓம் சத்ய ரூபாய நம;
34. ஓம் மகா ரௌரவ நாகோய நம;
35. ஓம் சமஸ்த ஆபரணோயே நம;
36. ஓம் நீலாய நம;
37. ஓம் பக்தா பயங்கராய நம;
38. ஓம் வீரவர்ம சூதாநாதாய நம;
39. ஓம் ப்ரம்ம சர்ம வரப்ரதாய நம;
40. ஓம் சூலாரோபிகமாண்டவ்யாய நம;
41. ஓம் மகா மஹிச வாகநாய நம;
42. ஓம் மாண்டவ்ய சாபதாரிணே நம;
43. ஓம் தர்ம சாஸ்த்ர விசாரதாய நம;
44. ஓம் பலி னே நம;
45. ஓம் சக் ரினே நம;
46. ஓம் சித்ர குப்தாய நம;
47. ஓம் மார்க்கண்டயே பலப்ரதாய நம;
48. ஓம் துந்துபி ஸ்வநநிர்கோகாய நம;
49. ஓம் சிரார்த்த தேவாய நம;
50. ஓம் பரத ராசே நம;
51. ஓம் ஔதும் பராய நம;
52. ஓம் அந்த காய நம;
53. ஓம் சாஸ்த்ரே நம;
54. ஓம் பரமேஷ் டிநே நம;
55. ஓம் வ்ரு கோதராய நம;
56. ஓம் கராள காய நம;
57. ஓம் சர்வலோக நமஸ்க்ருதாய நம;
58. ஓம் சர்வக் ஞாய நம;
59. ஓம் சம நாய நம;
60. ஓம் தட்சிண தீசாய நம;
61. ஓம் ஸ்ரீர்ணாங் க்ராய நம;
62. ஓம் வைத்யுத ப்ரீயாய நம;
63. ஓம் காலாள காய நம;
64. ஓம் மநு ப்ராந்த்ரே நம;
65. ஓம் சாவித்திரி வரப்ரதாய நம;
66. ஓம் ப்ரபவே நம;
67. ஓம் பரணீதாரகா தீசாய நம;
68. ஓம் தத் நாய நம;
69. ஓம் தத்வோபதே சக்ருதே நம;
70. ஓம் உக்ர தண்டப்ரதாய நம;
71. ஓம் அவ்யக் தாய நம;
72. ஓம் நாசிகேத வரப்பிரதாய நம;
73. ஓம் பக்த ரட்சகாய நம;
74. ஓம் கா லாய நம;
75. ஓம் காக ரூபதராய நம;
76. ஓம் அவ்ய யாய நம;
77. ஓம் ஏகாத் ஸ்ரீ தித்யாதீசாய நம;
78. ஓம் மகா நரக நாலகாய நம;
79. ஓம் சம வர்த்திநே நம;
80. ஓம் தேவ தேட்யாய நம;
81. ஓம் மிருத் யவே நம;
82. ஓம் நீல மனோகராய நம;
83. ஓம் வைவ ஸ்வதாய நம;
84. ஓம் பித்ரு பதயை நம;
85. ஓம் புண்ய பாப விசாரகாய நம;
86. ஓம் சண்ட ப்ரசண்ட சேநாபதே நம;
87. ஓம் கர்க சாய நம;
88. ஓம் மஹிச துவசாய நம;
89. ஓம் மேருசைல சமா நௌ சேஹரயே நம;
90. ஓம் சர்வ குகாஸ யாய நம;
91. ஓம் சதுராசா த்ருக்ப்ரசார காய நம;
92. ஓம் கூடி பாபாத்ம மாதனாய நம;
93. ஓம் நட ஸ்தாய நம;
94. ஓம் சத்ரு சம்கர்த்தரே நம;
95. ஓம் புண்ய ஆத்மனே நம;
96. ஓம் பத்மசப் ப்ரியாய நம;
97. ஓம் ம்ருத்யு நாதாய நம;
98. ஓம் சநி ப்ராத்ரே நம;
99. ஓம் இந்திர ஓஷ்டாய நம;
100.ஓம் சண்ட சாசனாய நம;
101. ஓம் காக சாதி வரப்ரதாய நம;
102. ஓம் யமுனா சோதராய நம;
103. ஓம் மந்தாய நம;
104. ஓம் சுவாண திவ்ய சூசம் யுதாய நம;
105. ஓம் சுவ சம்யுதாய நம;
106. ஓம் யுதிஷ்டிர பித்ரே நம;
107. ஓம் சர்வேஷ்டார்த்த பல ப்ரதாய நம;
108. ஓம் இயமனே நம;

அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸமர்ப்பயாமி

யம நாமம் சபித்து, பழ, தாம்பூல, நைவேத்யம் சமர்பித்து, தூப, தீப, கர்ப்பூர, நீராஞ்சனம் செய்க மலர் சாத்துக.

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple news
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple news
அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ ... மேலும்
 
temple news
அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ... மேலும்
 
temple news
இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி ... மேலும்
 
temple news
மழையாய்ப் பெய்து மகிழ்விப்பது பெருவெள்ளமாய்த் தோன்றித் துன்புறுத்தவது நெடுநாளாய் வாராதிருந்து ஏங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar