ராமாயணத்தை படிக்க இயலாதவர்கள், பின்வரும் ஸ்லோகத்தை தினமும் காலையில் நீராடியதும் படித்தால் போதும். ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும். மனதில் அமைதி, மகிழ்ச்சி நிலைக்கும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.
ஸ்ரீராமம் ரகுகுல திலகம் சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் அங்குல்யா பரண சோபிதம் சூடாமணி தர்சனகரம் ஆஞ்சநேய மாஸ்ரயம் வைதேஹி மனோகரம் வானர சைன்ய சேவிதம் சர்வமங்கள கார்யானுகூலம் சததம் ஸ்ரீராமசந்திர பாலயமாம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம் இதன் பொருள்: ரகு வம்சத்தின் திலகமான ராமர், சிவதனுசு என்னும் வில்லை வளைத்து சீதையை மணம் புரிந்தார். கணையாழியை அனுமன் மூலம் கொடுத்தனுப்பி, சீதையின் மனம் குளிர செய்ததோடு, சூடாமணியை பெற்று மகிழ்ந்தார். வானர வீரர்கள் போற்றும் அவரை தினமும் வழிபட்டால் சர்வமங்களம் உண்டாகும். செயலில் வெற்றி கிடைக்கும்.