சந்ததி உண்டாக புரட்டாசி வளர்பிறை அஷ்டமியில் மேற்கொள்வது துார்வாஷ்டமி விரதம். இந்நாளில்(செப்.28) காலையில் நீராடி தந்தையும், பிள்ளையுமான சிவன், விநாயகர் இருவரையும் வழிபட்டு விரதமிருக்க வேண்டும். பூஜையறையில் அவல், பொரி, பால், வாழைப்பழம் படைத்து பூஜிக்க வேண்டும். விநாயகர் அகவல், 108 போற்றி, சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிப்பது நல்லது. மாலையில் கோயிலில் விநாயகர், சிவனுக்கு விளக்கேற்றி வழிபடுவது அவசியம். இதன் பயனாக, நம் தலைமுறை தொடர்ந்திருக்கும்.