Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அப்பா பிள்ளை விரதம் ஆண்டாள் அருளிய அமுதம் ஆண்டாள் அருளிய அமுதம்
முதல் பக்கம் » துளிகள்
சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்!
எழுத்தின் அளவு:
சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்!

பதிவு செய்த நாள்

05 செப்
2017
05:09

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகார முறை இது.   தினமும் உலர்திராட்சை ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.  உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும், அதையே மாற்றக்கூடிய சக்தி இதற்கு உண்டு என்கிறார். இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி, வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படித்தாலும், ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.   காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா, தெரியவில்லை!.. ஆனால், உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான்.   

உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான ஜீவ ராசி – காக்கை இனம்.   குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத்திகழ இந்த காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.   திறந்த வெளியில் தரையைத் தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள்.   அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்றக ணக்கில் கைப்பிடி அளவு எடுத்துவைத்து,   காக்கைகளை அழைப்பார்கள். அவர்களின்அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும். அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள் “கா கா’ என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக்காக்கைகள் உணவினைச்சாப்பிட்டு சென்றதும், அந்தவாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.   இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள்.  காக்கை சனிபகவானின் வாகனம். காக்கைக்கு உணவுஅளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.  காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு. காக்கையிடம் உள்ளதந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காண முடியாது. எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்குஉணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும்   சனியும் சகோதரர்கள்ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது. காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றிபெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்ல பலன் உண்டு.   வீடுதேடிகாகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும் எனவே, காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப்பெற்று மகிமகிழ்வுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

 
மேலும் துளிகள் »
temple news
வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி இன்று. இரவு சந்திரன் ... மேலும்
 
temple news
தினமும் அதிகாலையில் நவக்கிரகங்கள் ஒன்பதும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் திருவடி தரிசனம் பெற ... மேலும்
 
temple news
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. கார்த்திகை நாளில் ... மேலும்
 
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar