நான்காம் பிறையைத் தரிசிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2017 05:09
தேய்ந்தும், வளர்ந்தும் இருப்பது சந்திரனின் இயல்பு. அது நம் மனதுக்கும் பொருந்தும் துயரத்தில் தேய்ந்தும், மகிழ்ச்சியில் வளர்ந்தும் தென்படும். சந்திரனை மனதோடு ஒப்பிடும் ஜோதிடம். மன வளர்ச்சிக்குச் சந்திரனின் பங்கு முக்கியமானது என்றும் அது கூறும். ஈசனும், உமையும், கணேசனும் பிறைச் சந்திரனைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். சந்திரமவுலி, பாலச்சந்திரன் என்ற பெயர்கள் அவர்களுக்குப் பெருமை அளிக்கிறது.
ஒருமுறை சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார் கணபதி கையில் கொழுக்கட்டை ஏந்திய கணபதியின் தோற்றத்தைப் பார்த்து ஏளனம் செய்தான் சந்திரன். அன்று பிள்ளையார் சதுர்த்தி கோபமுற்ற கணபதி, சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளவாவார்கள்! என்று சபித்தார். மனம் கலங்கிய சந்திரன் மன்னிக்கும்படி வேண்டி, அவரை வழிபட்டார். சாப விமோசனம் கிடைத்தது. அதோடு மூன்றாம் பிறையைப் பார்ப்பவர்களுக்கும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.
சதுர்த்தி சந்திரனைப் பார்த்து வீண் பழிக்கு ஆளானான். கண்ணன். கணபதியை வேண்டி பழியில் இருந்து விடுபட்டான். சதுர்த்தி சந்திரனைப் பார்த்தவர்கள் கண்ணனின் ஸ்யமந்தக வரலாற்றைச் சொன்னால் பழியிலிருந்து விடுபடுவார்கள் என்று புராணம் தெரிவிக்கிறது. சொல்ல வேண்டிய செய்யுள் இதோ....