ஒரு கிரிக்கெட் வீரர் சதம் அடிக்கிறார்...உடனே மட்டையை வானோக்கி உயர்த்தி, தன் புகழ் உயரக் காரணமான கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறார். ஆனால், குருவாயூரப்பன் பற்றி நாராயணீயம் என்ற காவியம் இயற்றிய நாராயண பட்டாத்திரி என்பவர், காவியம் எழுதி முடித்ததும் குருவாயூரப்பனுக்கு நன்றி சொல்லாமல், தனக்கு அவன் தந்த வியாதிக்கு நன்றி சொன்னார். ஏன் தெரியுமா? இந்த வியாதி வந்ததால் தான், நான் உன்னையே நினைத்தேன். உன்னைப் புகழ்ந்து கவிதைகள் எழுதினேன். இந்த காவியத்தை உருவாக்கினேன். இது தான் இன்று என் புகழுக்கு காரணமாக இருக்கிறது. எனவே, வேறு கஷ்டம் ஏதேனும் இருந்தாலும் கொடு,இன்னொரு காவியம் பிறக்கும், என்றார். புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாளை வழிபடும் போது, பகவானே! ஏதோ முன்ஜென்ம கர்மவினையால் எனக்கு இந்த கஷ்டத்தை தந்துள்ளாய். இனியேனும் என்னை காத்தருள், என்று வேண்டுங்கள்.