Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக தேவதைகள் காவல் காக்கும் கால ... தேய்பிறை சஷ்டி: சரவணபவ சொல்லி கந்தனை வழிபட கஷ்டங்கள் நீங்கும்! தேய்பிறை சஷ்டி: சரவணபவ சொல்லி ...
முதல் பக்கம் » துளிகள்
1,000 ஆண்டுகள் பழமையான மஹாபலேஸ்வரா கோவில்
எழுத்தின் அளவு:
1,000 ஆண்டுகள் பழமையான மஹாபலேஸ்வரா கோவில்

பதிவு செய்த நாள்

03 மார்
2026
01:03

மைசூரு என்றால் பெரும்பாலானவர்களுக்கு அரண்மனையும், சாமுண்டி மலையும் தான் நினைவுக்கு வரும். ஆனால், சாமுண்டி மலை என்ற பெயர் வருவதற்கு முன்னரே, அந்த மலை மஹாபாலாத்ரி அல்லது மஹாபலா மலை என்று அழைக்கப்பட்டது பலருக்கு தெரியாது.


ஆம்... தற்போது சாமுண்டீஸ்வரி கோவில் அமைவதற்கு முன், தற்போது தெற்கு திசையில் உள்ள, 1,000 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை, மஹாபலேஸ்வரா என்றும், உத்பவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். துர்கா சக்தி பீடமாகவும் உள்ள இந்த ஸ்தலம், 108 சக்தி பீடங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.


கங்கை மன்னர்கள் காலத்தில் கோவில் கட்டப்பட்டது. அதன்பின் வந்த ஹொய்சாலா மன்னர்களில் பிரபலமான மன்னரான விஷ்ணுவர்த்தனா, இக்கோவிலை விரிவாக்கம் செய்தார். அவரது காலத்தில் கோவிலுக்குள் அர்த்த மண்டபம், நவக்கிரஹம் அமைக்கப்பட்டது.


இக்கோவில் கட்டட வடிவமைப்பு கங்கை மன்னர்கள், ஹொய்சாலா மன்னர்கள், சோழர் மன்னர்கள் ஆட்சி காலத்தை பிரதிபலிக்கிறது. அர்த்த மண்டபமும், நவக்கிரஹமும் அமைந்து உள்ள பகுதி, ஹொய்சாலா கட்டட கலையை பிரதிபலிக்கிறது. சிவன் முகத்துடன் கூடிய லிங்கமாக, மஹாபலேஸ்வரா அருள்பாலிக்கிறார்.


சிவலிங்கத்தின் வலதுபுறத்தில் தாய் பார்வதி அமைந்து உள்ளார். சிவனுக்கு எதிரே நந்தி அமர்ந்துள்ளார். கருவறை வெளியே சுவற்றில் சுற்றிலும் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவா, மகிசாசுரமர்த்தினி விக்ரஹரங்கள் அமைந்து உள்ளன.


சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் உள்ளார். கோவில் வளாகத்தில் சப்த கன்னியர்கள், விஷ்ணு, விநாயகர், பார்வதி, சிவகாமியுடன் நடராஜர், பல்வேறு லிங்கங்கள், பைரவர், இந்திரர், பிரம்மா விக்ரஹங்களும் இடம் பெற்றுள்ளன.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருக்கோவில் வரலாறு: இத்திருக்கோவில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar