Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டிய வரம் அளிக்கும் காசி ... 1,000 ஆண்டுகள் பழமையான மஹாபலேஸ்வரா கோவில் 1,000 ஆண்டுகள் பழமையான மஹாபலேஸ்வரா ...
முதல் பக்கம் » துளிகள்
நாக தேவதைகள் காவல் காக்கும் கால பைரேஸ்வரா கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாக தேவதைகள் காவல் காக்கும் கால பைரேஸ்வரா கோவில்

பதிவு செய்த நாள்

03 மார்
2026
01:03

பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா ஜடிகேனஹள்ளி கிராமத்தில் உள்ளது, கால பைரேஸ்வரா கோவில். 2,000 ஆண்டு பழமையான இக்கோவில், கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. அமாவாசை அன்று கோவிலுக்கு வந்து, கால பைரேஸ்வரரை தரிசனம் செய்தால், பக்தர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னை தீர்ந்து போகும் என்று நம்பப்படுகிறது.


சிவபெருமானின் மற்றொரு வடிவமான கால பைரவர் மீது, மாலம்மா என்ற பெண் ஆழ்ந்த காதல் கொண்டதாகவும், கால பைரவரை மணந்து விடலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.


ஒரு நாள் மாலம்மாவின் கனவில் தோன்றிய கால பைரவர் தன் பிரம்மச்சரிய உறுதிபாட்டை வெளிப்படுத்தி உள்ளார். மாலம்மாவுக்கு தெய்வீக அருளையும் வழங்கினார். அடுத்தடுத்த பிறவிகளில் கால பைரவருக்கு சகோதரியாக மாலம்மா பிறந்ததாகவும் கூறப்படுகிறது.


இக்கோவிலில் கால பைரவர், மாலம்மாவுக்கு தனித்தனி சிலைகள் உள்ளன. பூதராயர், பூதராட்சசன், நந்தி சிலைகளும் இங்கு உள்ளன. தாமரை, வீணை, இசைக்கருவிகள் ஏந்திய கலைஞர்கள் போன்ற உருவங்கள் பக்தர்களை வெகுவாக கவர்கின்றன.


இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும், கோவிலுக்கு அடியில் ஏராளமான பொக்கிஷங்கள் புதைந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரவு முழுதும் கோவில் வளாகத்தை, நாக தேவதைகள் பாதுகாப்பதாகவும் அர்ச்சர்கள் கூறுகின்றனர்.


ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஹொஸ்கோட், கோலார், ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.


30 கி.மி., துாரம்

பெங்களூரில் இருந்து கோவில் 30 கி.மீ., துாரம்

மெஜஸ்டிக்கில் இருந்து 317-yb பி.எம்.டி.சி., பஸ்சில் சென்றால் ஜடிகேனஹள்ளி கிராமத்திற்கே செல்லலாம்

ஹொஸ்கோட்டில் இருந்து ஜடிகேனஹள்ளிக்கு 6 கி.மீ., துாரம்

மெட்ரோ ரயிலில் கே.ஆர்.புரம் சென்று, அங்கிருந்து ஹொஸ்கோட்டிற்கு பஸ்சில் சென்று, கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar