பகவத்கீதை பக்தர்களை நான்காகப் பிரிக்கிறது. கடவுளிடம் எதையும் கேட்காதவன் துறவி, இனி பிறவி வேண்டாம் என வழிபடும் சாதகன், நோய், துன்பம் நீங்க வழிபடுபவன், செல்வ வளம் வேண்டி பக்தி செய்பவன். இதில் முதல் மூன்று கோரிக்கையும் நியாயமானது. ஆனால், கடவுளிடம் செல்வம் வேண்டுவது நியாயமா? என்றால், அதுவும் நியாயம் என்கிறார் கிருஷ்ணர். ஏனென்றால், செல்வ வளம் வேண்டுபவரும் கடைசியில், பக்தி மூலமாகவே கடவுளைச் சரணடைந்து விடுவர். லட்சுமி கடாட்சம் பெற வழிபடுபவனை அர்த்தார்த்தி’ என்பர். அர்த்தம் என்பதற்கு செல்வம்’ என்பது பொருள். இந்த அர்த்தார்த்தியையும் கடவுளிடம் சேர்ப்பவள் பக்தி’ என்னும் பெரிய லட்சுமி’ தான். ஏனென்றால், பக்தியே வாழ்வின் மிகப் பெரிய செல்வம்.