பதிவு செய்த நாள்
11
நவ
2017
04:11
குறிக்கோள் போல, அதை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும் என்பதை 18 படிகள் உணர்த்துகின்றன. மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய ஐம்புலன்களை குறிப்பது முதல் ஐந்து படிகள். ஆறு முதல் பதிமூன்று வரை எட்டுவித ஆசைகளான மண், பெண், பொன், புகழ், பணம், பதவி, உடல் சுகம், தகுதிக்கு மீறிய எண்ணம் ஆகியவை. பதினான்கு முதல் பதினாறு வரையுள்ள படிகள் முக்குணங்கள் அதாவது சாந்தம், வீரம், சோம்பல். பதினேழாம்படி அறியாமை, பதினெட்டாம்படி அறிவைக் குறிக்கும். இக்குணங்களை கடந்த மனிதன், கடவுள் நிலைக்கு உயர்கிறான். இதை உணர்த்தும் விதமாக தத்வமஸி (நீயே கடவுள்) என்ற வேத வாக்கியம் இங்கு இடம் பெற்றுள்ளது.