அம்பாளுக்கு, சிங்க வாகனம் இருப்பதன் காரணம் தெரியுமா? சிங்கம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், தனது இணையுடன் சேர்ந்து, குட்டி போடும். அதனால் தான் அது வலிமையில் சிறந்து விளங்குகிறது. மனிதனும் சிங்கத்தை போல் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. சிங்கம் வலிமைக்கும் தலைமை பொறுப்புக்கும் சின்னமாக விளங்குகிறது. எதிரிகளை தாக்கி அழிக்கிறது. அம்பிகையும் தீய சக்திகளை தாக்கி அழிப்பவள் என்பதை சிம்ம வாகனம் குறிக்கிறது.