Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

நல்ல காரியங்களை அமாவாசை நாட்களில் துவங்கலாமா? நல்ல காரியங்களை அமாவாசை நாட்களில் ... அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழில்! அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் ...
முதல் பக்கம் » துளிகள்
தானம்.. தர்மம் என்ன வேறுபாடு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
15:19

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது. இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில்? கேட்டது ஈசன். பரம்பொருளே.. பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?  இது அநீதி அல்லவா? எனட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது. சூரியனே... நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்... தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.... ஆனால்,  தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர  தர்மமாகப் பெறவில்லை.  எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா? என்றார். ஈசனை வணங்கிய சூரியத் தேவன். புரிந்தது இறைவா ! தானமும் தர்மமும் பாவமும் புண்ணியமும் எல்லாமும் நீயே என்பதும் புரிந்தது என்றார். கேட்டு கொடுப்பது தானம் ! கேட்காமல் அளிப்பது தர்மம்!

 
மேலும் துளிகள் »
temple
எல்லாரும் சேர்ந்து உண்பதற்கு ’பந்தி’ என  பெயர். இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? வடமொழியில் ... மேலும்
 
temple
’சப்த’ என்றால் ஏழு, ’விடங்கம்’ என்றால் ’உளியால் செதுக்கப்படாமல் உருவான சிலை’. அசுரர்களை அழிப்பதில் ... மேலும்
 
temple
தமிழகத்தின் ’மகா’ லிங்கத்திற்கு நடக்கும் ’மெகா’ அன்னாபிஷேகத்தை கண்குளிர காண ஆசையா... அரியலுார் ... மேலும்
 
temple
தஞ்சாவூர் பெரிய கோயில்  சிவலிங்கம் (பிரகதீஸ்வரர்) உலகிலேயே பெரியது. ஆறடி உயரம், 55 அடி சுற்றளவு கொண்ட ... மேலும்
 
temple
கசப்பான வேம்பை மாரியம்மனாக வழிபடுவது போலவே. உலகின் தண்ணீர்த்தேவையை கடலே பூர்த்தி செய்கிறது. குடிநீர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.