Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தானம்.. தர்மம் என்ன வேறுபாடு? தானம்.. தர்மம் என்ன வேறுபாடு? மீனாட்சி பஞ்சரத்தினம் மீனாட்சி பஞ்சரத்தினம்
முதல் பக்கம் » துளிகள்
அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
15:56

தினமும் சூரியோதய வேளையில் அகத்தியர் அருளிய "ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த நன்மை தரும்.

* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள் தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.

* தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.

* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே!"சப்த என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய்.

* சூரியனே! ஆகாயத்திற்கு நீயே நாதன். ராகு என்னும் இருளைப் பிளந்து கொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய். ரிக், யஜூர், சாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனாய் இருக்கிறாய்.

* கண்கண்ட தெய்வமே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன். தட்சிணாயண காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.

*வட்ட வடிவத்தை உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயமாகும் போது மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! மகத்தான ஒளியை உடையவனே! எல்லாப் பிராணிகளிடமும் அன்§கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிப்பவனே! நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிறைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதை களைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா. அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற 12 மூர்த்திகளை உள்ளடக்கியவனே! உனக்கு நமஸ்காரம்.

* உருகியோடும் தங்க ஆறு போன்ற பிரகாசம் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குபவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.

* உலகம் அழியும் காலத்தில் இந்த ஜகத்தை நீயே அழிக்கிறாய். மீண்டும் நீயே அதை சிருஷ்டிக்கிறாய். ஜலத்தை வற்றச் செய்கிறாய். உலகையே எரிக்கிறாய். மழை பெய்யச் செய்கிறாய். எல்லா உயிர்களும் அழித்து அடங்கியிருக்கும் போது நீ மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறாய். சர்வாத்மாவே! சர்வேஸ்வரனே! வேதங்களால் கூட உன்னை அறியமுடியாது. ஆதித்யனே! வேத விற்பன்னர்கள் செய்யும் யாகமாகவும், அதன் பலனாகவும் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம் !!

 
மேலும் துளிகள் »
temple
விநாயகர் திருமணமானவர். அவருக்கு சித்தி, புத்தி என இருமனைவிகள் உண்டு என்று வடமாநிலங்களில் ... மேலும்
 
temple
மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம், பீஷ்மரால் தர்மருக்கு உபதேசிக்கப்பட்டது. 150 ... மேலும்
 
temple
ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதசிகளும் அதில் விரதம் இருப்பதால் கிட்டும் பலன்களும் ... மேலும்
 
temple
பிரகலாதனுக்காக ஓடோடிவந்த அவசரதிருக்கோலம் நரசிம்மர் தான். அவரைவழிபட்டால், நிச்சயம் உடனடியாக பலன் ... மேலும்
 
temple
சிதம்பரம் நடராஜர் கோயிலிலுள்ள ஆதிமூலநாதர், உமைய பார்வதி அம்மனை வழிபட்டால் உடனடியாக திருமணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.