பதிவு செய்த நாள்
12
மே
2018
03:05
ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி, நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் பின்வரும் பக்கங்களில் தரப்பட்டுள்ளன. உங்களின் ஜென்ம நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு பலன் பெறுங்கள்.
அசுவினி, மகம், மூலம்
நட்சத்திர அதிபதி: கேது
இஷ்ட தெய்வம்: விநாயகர்
நிறம்: சிவப்பு
எண்: 5,7,9
நட்பு ராசிகள்: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
வழிபாடு: சதுர்த்தியன்று விநாயருக்கு அருகம்புல்மாலை
பரணி, பூரம், பூராடம்
நட்சத்திர அதிபதி: சுக்கிரன்
இஷ்ட தெய்வம்: லட்சுமி
நிறம்: வெள்ளை
எண்: 3,6,8
நட்பு ராசிகள்:மிதுனம், தனுசு, மகரம், கும்பம்
வழிபாடு: வெள்ளிக்கிழமையில் லட்சுமி சன்னதியில் நெய்தீபம்
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
நட்சத்திர அதிபதி: சூரியன்
இஷ்ட தெய்வம்: சிவன்
நிறம்: சிவப்பு
எண்: 1,5,7
நட்பு ராசிகள்: கடகம், விருச்சிகம், தனுசு, மீனம்
வழிபாடு: பிரதோஷ நாளில் சிவன் கோயில் தரிசனம்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்
நட்சத்திர அதிபதி: சந்திரன்
இஷ்ட தெய்வம்: அம்பிகை
நிறம்: வெள்ளை
எண்:2,3,9
நட்பு ராசிகள்: மிதுனம், சிம்மம், கன்னி
வழிபாடு: பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய்தீபம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
நட்சத்திர அதிபதி: செவ்வாய்
இஷ்ட தெய்வம்: முருகன்
நிறம்: இளஞ்சிவப்பு
எண்:3,6,9
நட்பு ராசிகள்: சிம்மம், தனுசு, மீனம்
வழிபாடு: செவ்வாயன்று முருகன் பால் அபிேஷகம்
திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்சத்திர அதிபதி: ராகு
இஷ்ட தெய்வம்: துர்க்கை
நிறம்: கருமை, கரும்புள்ளி கலந்த நிறம்
எண்:1,4,7
நட்பு ராசிகள்: மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனம்
வழிபாடு: வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நட்சத்திர அதிபதி: குருபகவான்
இஷ்ட தெய்வம்: தட்சிணாமூர்த்தி
நிறம்: மஞ்சள்
எண்: 2,3,9
நட்பு ராசிகள்: மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்
வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்சத்திர அதிபதி: சனீஸ்வரர்
இஷ்ட தெய்வம்: சாஸ்தா, குலதெய்வம்
நிறம்: கருநீலம் எண்: 5,6,8
நட்பு ராசிகள்: ரிஷபம், மிதுனம்
வழிபாடு: சனிக்கிழமையில் சாஸ்தாவுக்கு நெய்தீபம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திர அதிபதி: புதன்
இஷ்ட தெய்வம்: மகாவிஷ்ணு
நிறம்: பச்சை
எண்:1,5,8
நட்பு ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம்
வழிபாடு: சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசிமாலை