பதிவு செய்த நாள்
09
ஜூன்
2018
02:06
ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் ஆகியன மண்டபத் தலங்கள் எனப்படும். இதில் ஸ்ரீரங்கம் கோயில் போக மண்டபமாகவும், திருப்பதி புஷ்ப மண்டபமாகவும், காஞ்சிபுரம் தியாக மண்டபமாகவும், திருநாராயணபுரம் ஞானமண்டபமாகவும் திகழ்கிறது.
நாரதர், மைத்ரேயர், வியாசர், பிருகு, சாண்டில்ய மகரிஷி ஆகியோருக்கு விஷ்ணு ஞானம் வழங்கியதால் திருநாராயணபுரம் ஞான மண்டபம் எனப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ராமானுஜர் இப்பகுதியை ஆட்சி செய்த பிட்டிதேவராயன் என்னும் சமண மன்னரை விஷ்ணு பக்தனாக்கினார். இதன் பின் இம்மன்னர் ‘விஷ்ணுவர்த்தன்’ என அழைக்கப்பட்டார். ராமானுஜர் இங்கு தங்கிய காலத்தில், நாராயணபுரத்திலுள்ள துளசிக்காட்டிலுள்ள புற்றில் பெருமாள் சிலை புதைந்து கிடப்பதை அறிந்தார். ஆதிவாசிகளின் உதவியுடன், மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். அம்மக்களை ‘திருக்குலத்தார்’ எனப் பெயரிட்டு விஷ்ணு பக்தர்களாக்கினார். விஷ்ணுவர்த்தன் மன்னர் ஆதரவுடன் திருநாராயணபுரம் கோயிலை பெரிய அளவில் கட்டினார்.