தோன்றி அழியக் கூடியது உலகம் அல்லது இயற்கை. இதனை ‘உலக இயக்கம்’ என சொல்வதுண்டு. அந்த இயக்கத்தை செய்பவர் கடவுள். அவருக்கு தோற்றம், மறைவு, மூப்பு கிடையாது. உலகை ‘மாயை’ என்றும், கடவுளை ‘மாயி’ என்றும் சைவ சித்தாந்தம் சொல்கிறது. எனவே இயற்கையும், கடவுளும் வெவ்வேறானவை.