பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
03:07
இறந்தவர்களுக்கு பிதுர்கடன் செய்யாவிட்டால் பிதுர் தோஷம் வரும். வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு பிதுர்சாபம் ஏற்படலாம். இது சந்ததியையும் தொடர வாய்ப்புண்டு. இதனால் குடும்பத்தில் அமைதி குறையும். சுப விஷயங்கள் தடைபடும். இந்த தோஷம் அகல அமாவாசை விரதம் இருந்து, பசு மாட்டிற்கு புல், கீரை, பழங்கள் கொடுக்க வேண்டும். அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் நட்சத்திரத்தன்று வரும் அமாவாசையன்று சிரார்த்தம் செய்வது இன்னும் சிறப்பு. தீர்த்தக்கரைகளில் நீராடி, பசுவை மூன்று முறை சுற்றி வந்து வணங்கலாம். ராமேஸ்வரம், வேதாரண்யம், தேவிபட்டினம், கோடிக்கரை போன்ற தலங்களில் கன்றுடன் பசுதானம் செய்யலாம். புரட்டாசி மஹாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் அல்லது அட்சய திரிதியை நாளில் தர்ப்பணம் செய்வது நல்லது. ஆந்திராவிலுள்ள காளஹஸ்தியில் பித்ரு பூஜை செய்தாலும் தோஷம் நீங்கும்.