செல்வத்தை இழந்த கோவலனும், கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். வழியில் காளி கோவில் ஒன்றில் இரவு தங்கினர்.
பவுர்ணமி பூஜைக்காக வேடர்கள் அங்கு கூடினர். ஒரு வேடுவப் பெண்ணை காளியாக அலங்கரித்து வழிபட்டனர். அந்தப் பெண்ணின் கூந்தலை பாம்புக்குட்டி ஒன்றால் இழுத்துக் கட்டினர். அதன் மீது காட்டுப்பன்றியின் கொம்பை மூன்றாம் பிறை போல வைத்தனர். புலிப்பற்களை மாலையாக கோர்த்து தாலியாக அணிவித்தனர். புலித்தோலை ஆடையாக உடுத்தி, அப்பெண்ணை கலைமானின் மீது அமரச் செய்தனர். அவள் முன் படையல் இட்டு மலர்களைத் தூவி, வாசனை திரவியங்களை தீயில் இட்டு நறுமணம் கமழச் செய்தனர். இந்த பூஜை முறையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விவரித்துள்ளார்.