திதிகளில் உயர்ந்தது வளர்பிறை திரிதியை. அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் இது வரும். சந்திரனின் வளர்ச்சிக்குரிய நாட்களில் இது செல்வ வளத்தைக் குறிக்கும். ’அட்சயம்’ என்றால் ’வளர்தல்’. திரவுபதியின் ஆடையை துச்சாதனன் உரிந்த போது, கிருஷ்ணர் அவளைக் காப்பாற்றும் விதத்தில் உதிர்த்த வார்த்தை ’அட்சய’. இதன் காரணமாக அவளது புடவை வளர்ந்து கொண்டே போனது. அட்சய திரிதியை அன்று (மே 7) தயிர்சாதம் மற்றும் ஆடை தானம் செய்தால் செல்வ வளம் பெருகும்.