காரைக்காலம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2019 12:06
நாயன்மார்களில் காரைக்காலம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பது ஏன் தெரியுமா?
புனிதவதி என்னும் பெயர் கொண்ட இவர், பரமதத்தன் என்னும் வணிகரை மணந்தார். ஒருநாள் தனதத்தன் இரண்டு மாம்பழங்களை பணியாளர் மூலம் மனைவிக்கு கொடுத்தனுப்பினார். அதில் ஒரு பழத்தை சிவனடியார் ஒருவருக்கு பிச்சையிட்டார் அம்மையார். பின்னர் வீட்டுக்கு வந்த பரமதத்தன், பழம் சாப்பிடக் கேட்க, அம்மையாரும் கொடுத்தார். ”ஆஹா! சுவையாக இருக்கிறதே! இன்னொன்றையும் கொடு’ என்று கேட்க, அம்மையார் திடுக்கிட்டார். பூஜையறைக்கு சென்று சிவனை வழிபட்ட போது கையில் மாம்பழம் ஒன்று விழுந்தது.
அப்பழத்தை சாப்பிட்ட பரமதத்தன், முதல் பழத்தை விட அதிக சுவையாக இருப்பதை உணர்ந்தார். அது பற்றி விசாரிக்க, அம்மையார் நடந்ததை விவரித்தார். “புனிதவதி! என் கண்முன்னே பழத்தை வரவழைத்துக் காட்டு பார்க்கலாம்” என்றார். அம்மையார் மீண்டும் சிவனை வழிபட்டு பழத்தை வரவழைத்தார். இதைக் கண்டு பயந்த கணவர், அம்மையாரைப் பிரிந்து வேறொரு பெண்ணை மணந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ’புனிதவதி’ எனப் பெயரிட்டார். அக்குழந்தையைக் காணச் சென்ற அம்மையாரின் காலில் விழுந்தார் பரமதத்தன். இதன் பின்னர் சிவனே கதி என வாழ்ந்த அம்மையார் கைலாயத்திற்கு நடந்தே சென்றார். ’என் தாயே’ என அம்மையாரை வரவேற்ற சிவபெருமான் முத்தியளித்தார். சிவனுக்கே தாயாகும் பேறு இவர் நிற்பது முறையல்ல என்பதால் அமர்ந்த கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார்.