Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு சதுர்வேதி விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சதுர்வேதி விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சதுர்வேதி விநாயகர்
  உற்சவர்: சதுர்வேதி விநாயகர், மகாமாரியம்மன்
  அம்மன்/தாயார்: மகாமாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: வெண்ணாற்று
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: நீராடுமங்கலம்
  ஊர்: நீடாமங்கலம்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை திருவிழா, ஆவணி, ஆடிகடைசி வெள்ளி, விளக்கு பூஜை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  இந்தக் கோயில் சதுர வடிவில் இருப்பதால் சதுர்வேதி விநாயகர் என பெயர் பெற்றுள்ளது சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 மணி முதல் காலை 11.00 மணி வரை மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சதுர்வேதி விநாயகர் (மகாமாரியம்மன்) திருக்கோயில், நீடாமங்கலம் 614404, திருவாரூர்.  
   
போன்:
   
  +91 99421- 07699 
    
 பொது தகவல்:
     
  நீராடுமங்கலம் என்றதே பின்னாளில் நீடாமங்கலம் என மருவியுள்ளது. (1705ம் ஆண்டு சரபோஜி மன்னன் யமுனாம்பாளுடன் சகேத தீர்த்தில் நீராடியதால் இப்பெயர் பெற்றுள்ளது) ஊருக்கும் மேற்கு பக்கம் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்றுப் பக்கமும் நீரோட்டம் நிறைந்துள்ளது. வெண்ணாறு, கோரையாறு மற்றும் பாமணி ஆறு என மூன்று ஆறுகள் ஓடுகிறது. கிழக்குப் பக்கம்  ராஜ கோபுரம் மூன்று கலசலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் நுழைவு வாயிலில் மண்டபத்தில் வடக்கில் கொடி மரம், சூலம் மற்றும் பலி பீடம் உள்ளது. எதிரில் பேச்சியம்மன் வடக்குப்பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம்.  சதுரவடிவில் கோயில் அமைத்து நடுவில் சதுர்வேத விநாயகர் அருள்பாலிக்கிறார். சனி மூலையில் மகாமாரியம்மனும், தென் மேற்கில் காசிவிஸ்வநாதர் மற்றும் அம்மன் அருள்பாலிக்கிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
  புத்திரபாக்கியம், கல்வி, திருமணத்தடை, புத்திரர்களை தத்துக் கொடுப்பது போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறுவதால் பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  நோய் வயப்பட்ட பிள்ளைகளை கோயிலுக்கு தத்துக் கொடுத்து திருமண நேரத்தில் அழைத்துக் கொள்வது, பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை, (ஆடு,கோழி-உயிருடன்), தானியங்கள் காணிக்கை செலுத்துதல் போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருகாவிரி பாயும் சோழவளநாடு. இதற்கு வளநாடு, சென் னிநாடு, அபயநாடு, செம்பியநாடு, பொன்னிநாடு என்று வழங்கும் சோளணு தேசமாகும். இந்த தேசத்தில் கோயில்கள் பல உள்ளன. அவைகளில் புராணங்கள் நிறைந்தவை, தனிப்பாடல், ஆழ்வார்கள் மற்றும்  ஆன்றோர்களால் பாடல் பெற்ற கோயில்கள் பல அடங்கியுள்ளன. இவைகளில் தஞ்சை அரசனான பிரதாபசிம்ம மகாராஜாவால் அமைக்கப்பட்ட அபிமான கோயில் கோயிலாக விளங்குவதுடன், மகாராஷ்டிர ராஜ்யத்தை ஆதியில் உருவாக்கிய வெங்கோஜி மகாராஜாவின் பரம்பரையில் தோன்றிய பிரதாபசிம்ம மகாராஜா நீடாமங்கலம் என்னும் இவ்வூரில் இரண்டு கோயில்களும், சத்திரம் ஒன்றையும் 1761-ம் ஆண்டில் கட்டினார்.  இக்கோ யிலுக்கு, சந்தானராமசாமி மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்கள் சிறப்பு சேர்க்கிறது. இங்குள்ள விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

 
     
  தல வரலாறு:
     
  நான்கு வேதங்கள் கற்க விரும்பியவர்கள் இந்த கோயிலில் உள்ள விநாயகரிடம் வேண்டுதல் செய்து பின்னர் படித்த போது வேதங்கள் மனதில் பதிவானதால் கோயில் சதுர வடிவில் இருந்ததாலும் சதுர்வேத விநாயகர் என்று அழைக்கப்பட்டதாகவும், ஔவையார் சங்க தமிழ் வேண்டி, நான்கு வகையான பொருட்கள் வழங்குவதாக பாடல் பாடியதால் இங்குள்ள விநாயகருக்கு சதுர்வேத விநாயகர் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் பழுதடைந்தது.

அப்பகுதியினர் கோயிலை புதுப்பித்துள்ளனர். அதன் பின் பல்வேறு வடிவங்களாக வளர்ச்சிபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னாளில் அப்பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மகாமாரியம்மன் விக்கிரகத்தை இக்கோயிலில் வைக்கப்பட்டதால் பலரும் குலதெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்வதால் தற்போது அம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கடந்த 2002 -ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இந்தக் கோயில் சதுர வடிவில் இருப்பதால் சதுர்வேதி விநாயகர் என பெயர் பெற்றுள்ளது சிறப்புமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.