கேள்வியும் பதிலும்
கும்பாபிஷேகம், தரிசனம், செல்பேசி தடை, பயணம் — அதிகம் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்.
கும்பாபிஷேகம், தரிசனம், செல்பேசி தடை, பயணம் — அதிகம் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்.
2026 செப்டம்பர் 17, வியாழக்கிழமை (ஆவணி 31) காலை நடைபெறுகிறது. மூன்று முகூர்த்த வேளைகள் அறிவிக்கப்பட்டுள்ளன — காலை 7.40 மணிக்கு தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள், 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மன், 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரர்.
செப்டம்பர் 11 முதல் 16 வரை ஆறு நாள்களுக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் ஆகிய இரு மூலவர்களுக்கும் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது. கும்பாபிஷேக சடங்குகளுக்காக இந்த ஏற்பாடு. விரிவான தகவல்களுக்கு எங்கள் தரிசனம் ரத்து பக்கத்தைப் பாருங்கள்.
இல்லை. செப்டம்பர் 1 முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்பட 52 கோயில்களில் கேமரா வசதி கொண்ட செல்பேசிகள் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாயில்களில் ரூ.5 கட்டணத்தில் செல்பேசி வைப்பு மையங்கள் இயங்குகின்றன; ரசீது வழங்கப்படும்.
செப்டம்பர் 17 அன்று காலை முதல் தினமலர் நேரலைப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பும், நிமிடத்துக்கு நிமிடம் புகைப்படங்களுடன் கூடிய நேரலைத் தகவல்களும் இடம்பெறும். மதுரை நகரின் பல இடங்களில் LED திரைகளும் அமைக்கப்படுகின்றன.
கும்பாபிஷேக நாளன்று கோயில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் வெளியே அமைக்கப்படும் LED திரைகள் வழியாகக் காணலாம். இறுதி எண்ணிக்கையை அறநிலையத் துறை அறிவிக்கும்.
கடைசியாக 2009 ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018 பிப்ரவரியில் ஏற்பட்ட தீ விபத்து, அதைத் தொடர்ந்த திருப்பணிகள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கண்காணிப்பில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் மராமத்துப் பணிகள் ஆகியவை காரணமாக கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.
கோயில் திருப்பணிகள் முடிந்த பிறகு, யாகசாலையில் வளர்க்கப்பட்ட வேள்வித் தீயின் சக்தி கலசங்களில் ஏற்றப்பட்டு, அந்தக் கலச நீர் விமானங்கள் மற்றும் கோபுரங்களின் மீது வார்க்கப்படும் நிகழ்வு. இதன் வழியாக இறைசக்தி மீண்டும் திருமேனியில் நிலைநிறுத்தப்படுவதாக சைவ ஆகம மரபு கூறுகிறது. இதற்கான முறையான தமிழ்ப் பெயர் திருக்குட நன்னீராட்டு.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெறுவது மரபு. இந்த ஆண்டு அக்டோபர் தொடக்கம் வரை சிறப்புப் பூஜைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி நாள் விவரங்களை கோயில் நிர்வாகம் அறிவிக்கும்.
கும்பாபிஷேக நாள்களில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். தற்காலிக பேருந்து நிலையங்களும் வாகன நிறுத்துமிடங்களும் நகரின் வெளிப்பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்றன. இறுதி வரைபடத்தை எங்கள் பயண வழிகாட்டிப் பக்கத்தில் வெளியிடுவோம்.
செப்டம்பர் 8 முதல் 17 வரையிலான முழு நிகழ்ச்சி நிரலை — ஒவ்வொரு நாளின் காலை, மாலை சடங்குகள், இடம், நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் — எங்கள் நாள்காட்டிப் பக்கத்தில் பார்க்கலாம்.