கும்பாபிஷேக நிகழ்ச்சி நாள்காட்டி
செப்டம்பர் 8 முதல் 17 வரை — ஒவ்வொரு நாளின் காலை, மாலை சடங்குகள், நேரம், இடம். அறநிலையத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலின்படி.
செப்டம்பர் 8 முதல் 17 வரை — ஒவ்வொரு நாளின் காலை, மாலை சடங்குகள், நேரம், இடம். அறநிலையத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலின்படி.
8 செப்டம்பர் · ஆவணி 22 · செவ்வாய்கிழமை
சாந்தி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. மாலையில் வீரவசந்தராயர் மண்டபத்தில் வாஸ்து சாந்தி.
காலை 8.30 – காலை 11.30
மாலை 6.00 – இரவு 8.00
9 செப்டம்பர் · ஆவணி 23 · புதன்கிழமை
வைகை ஆற்றில் இரு வேளையும் சடங்குகள். காலையில் புனித நீர், மாலையில் புனித மண் எடுக்கப்படுகிறது.
காலை 7.00 – காலை 9.30
வைகை ஆறு
மாலை 5.00 – இரவு 7.00
வைகை ஆறு
10 செப்டம்பர் · ஆவணி 24 · வியாழக்கிழமை
காலையில் பொற்றாமரைக் குளத்தில் ஆச்சார்ய தசவித ஸ்நானம். மாலையில் பிரதான யாகசாலையில் அங்குரார்ப்பணம்.
காலை 8.00 – காலை 10.00
மாலை 6.00 – இரவு 7.15
பிரதான யாகசாலை
11 செப்டம்பர் · ஆவணி 25 · வெள்ளிக்கிழமை முக்கியம்
யாகசாலை அமைக்கப்பட்டு, சூரியனிடமிருந்து அக்னி எடுக்கப்படுகிறது. மாலையில் கம்பத்தடி மண்டபத்தில் முதற்கால வேள்வி தொடங்குகிறது.
காலை 7.00 – காலை 10.00
யானை மஹால் 100 கால் மண்டபம் — பழைய திருக்கல்யாண மண்டபம் யாகசாலை
மாலை 4.00 – இரவு 8.30
மாலை 4.00 — 4.35 மங்கல இசை; 4.35 முதல் சடங்குகள்.
12 செப்டம்பர் · ஆவணி 26 · சனிக்கிழமை
காலையில் இரண்டாம் கால வேள்வி, மாலையில் மூன்றாம் கால வேள்வி.
காலை 7.00 – காலை 11.30
மங்கல இசை 7.00, வேதபாராயணம் 7.30, திருமுறை பாராயணம் 8.00, சடங்குகள் 8.30 முதல்.
மாலை 4.00 – இரவு 8.00
மங்கல இசை 4.00, வேதபாராயணம் 4.30, திருமுறை பாராயணம் 5.00, சடங்குகள் 5.30 முதல்.
13 செப்டம்பர் · ஆவணி 27 · ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக பக்தர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
காலை 7.25 – பகல் 12.00
மங்கல இசை 7.25, வேத பாராயணம் 8.00, திருமுறை பாராயணம் 8.30, சடங்குகள் 9.00 முதல்.
மாலை 4.30 – இரவு 8.30
மங்கல இசை 4.30, வேத பாராயணம் 5.00, திருமுறை பாராயணம் 5.30, சடங்குகள் 6.05 முதல்.
14 செப்டம்பர் · ஆவணி 28 · திங்கட்கிழமை முக்கியம்
மாலை வேள்வியில் விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தியும் ரக்ஷாபந்தனமும் நடைபெறுகின்றன.
காலை 7.30 – பகல் 12.00
மங்கல இசை 7.30, வேத பாராயணம் 8.00, திருமுறை பாராயணம் 8.30, சடங்குகள் 9.05 முதல்.
மாலை 4.00 – இரவு 8.30
மங்கல இசை 4.00, வேத பாராயணம் 4.30, திருமுறை பாராயணம் 5.00, சடங்குகள் 5.30 முதல்.
15 செப்டம்பர் · ஆவணி 29 · செவ்வாய்கிழமை
கும்பாபிஷேகத்துக்கு முந்தைய இரண்டாம் நாள். வேள்விகள் தொடர்கின்றன.
காலை 7.00 – காலை 11.30
மங்கல இசை 7.00, வேத பாராயணம் 7.30, திருமுறை பாராயணம் 8.00, சடங்குகள் 8.30 முதல்.
மாலை 4.00 – இரவு 8.00
மங்கல இசை 4.00, வேத பாராயணம் 4.30, திருமுறை பாராயணம் 5.00, சடங்குகள் 5.30 முதல்.
16 செப்டம்பர் · ஆவணி 30 · புதன்கிழமை முக்கியம்
அதிகாலை 5 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம். மாலையில் நாடிசந்தானம். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மதுரைக்கு எழுந்தருளுகிறார்.
அதிகாலை 3.35 – காலை 5.00
பரிவார யாகசாலை
மங்கல இசை 3.35 முதல்; சடங்குகள் 4.00 முதல்.
காலை 5.00 – காலை 6.00
காலை 7.30 – காலை 11.30
பிரதான யாகசாலை
மங்கல இசை 7.30, வேத பாராயணம் 8.00, திருமுறை பாராயணம் 8.30, சடங்குகள் 9.05 முதல்.
மாலை 3.30 – இரவு 8.30
மங்கல இசை 3.30, வேத பாராயணம் 4.00, திருமுறை பாராயணம் 4.30, சடங்குகள் 5.00 முதல்.
17 செப்டம்பர் · ஆவணி 31 · வியாழக்கிழமை முக்கியம்
காலை 7.40, 7.55, 8.10 — மூன்று முகூர்த்த வேளைகளில் மகா கும்பாபிஷேகம். மாலையில் மூலவர் மகா அபிஷேகமும், இரவு பஞ்சமூர்த்திகள் மாசி வீதி உலாவும்.
அதிகாலை 3.35 – காலை 5.45
அதிகாலை 3.35 மங்கல இசை; சடங்குகள் 4.00 முதல்.
காலை 7.40
காலை 7.55
காலை 8.10
மாலை 4.00
இரவு 7.00
மேற்கண்ட நேரங்கள் கோயில் நிர்வாகம் வெளியிட்ட நிகழ்ச்சி நிரலின்படி. சடங்கு நேரங்களில் இறுதி நிமிட மாற்றங்கள் ஏற்படலாம். மாற்றங்கள் இப்பக்கத்திலும் நேரலைப் பக்கத்திலும் புதுப்பிக்கப்படும்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெறும். அந்த நாள்கள் உறுதியானதும் இங்கே சேர்க்கப்படும்.