மீனாட்சி அம்மன் கோயில்

🔴 LIVE | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், செப்டம்பர் 17. நிமிடத்துக்கு நிமிடத் தகவல்களும் புகைப்படங்களும்.

மூன்று முகூர்த்த வேளைகள்

  1. 7.40 பொன் விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள்
  2. 7.55 மீனாட்சி அம்மன் சன்னிதி
  3. 8.10 சுந்தரேஸ்வரர் சன்னிதி

நேரலைத் தகவல்கள்

  1. மதுரை, அருள்மிகு மீனாட்சி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா யாகசாலை

    மதுரை, அருள்மிகு மீனாட்சி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா யாகசாலை

  2. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; இன்று மாலை யாகசாலை பூஜை துவக்கம்

    மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) மாலை யாகசாலை பூஜை துவங்குகிறது. செப்.,17 கும்பாபிஷேகம் வரை இங்கு அம்மன், சுவாமி மூலவர்களை கும்பவடிவில் தரிசிக்கலாம்.

    மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடக்கிறது. அன்று காலை 7:40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை 7:55 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், காலை 8:10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று கும்பாபிஷேக சடங்குகளில் பங்கேற்கும் சிவாச்சாரியர்களுக்கு பொற்றாமரைக்குளத்தில் ஆச்சார்ய ஸ்நானம் நடந்தது. இதைதொடர்ந்து இன்று மாலை 4:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. தினமும் யாக வேள்வி நடக்கிறது. செப்.,16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கோயிலின் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை கோயிலுக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை எழுந்தருளுகின்றனர். செப்.,17 மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மஹாஅபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    யாகசாலையில் மூலவர்கள்; கோயிலில் இன்று மதியம் வரை அம்மன், சுவாமி மூலவர்களை பக்தர்கள் தரிசிக்கலாம். இதன்பிறகு செப்., 17 வரை யாகசாலையில் கும்பவடிவில் எழுந்தருள செய்திருக்கும் மூலவர்களை தரிசிக்கலாம். கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு கோயில் சார்பில் ரூ.5 கோடிக்கு குழு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகளுக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் உபயமாக வழங்கலாம். விருப்பமுள்ளவர்கள் கோயில் வடக்காடி வீதி திருவள்ளுவர் கழகத்தில் வழங்கலாம்.

தொடர்புடையவை

மேலே
விளம்பரம்