செய்திகள்
கோயிலிலிருந்தும் கும்பாபிஷேகத்திலிருந்தும் சமீபத்திய செய்திகள்.
கோயிலிலிருந்தும் கும்பாபிஷேகத்திலிருந்தும் சமீபத்திய செய்திகள்.
தினமலர் கோயில்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரவசமடைந்தனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் ...
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரவசமடைந்தனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் அக்., 2 வரை மண்டல பூஜை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடியும் வரை வெயிலை காணவில்லை. ‘இதுவும் சிவபெருமானின் திருவிளையாடல்’ என பக்தர்களும், பட்டர்களும் உணர்ச்சி வசப்பட்டனர்.
இன்று முதல் மண்டல பூஜை: கும்பாபிஷேகத்திற்கு பிறகு 48 நாட்களுக்கு(நவ.,3 வரை) மண்டல பூஜை நடக்கும். ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று(செப்.,18) துவங்கி அக்.,2 வரை மட்டுமே நடக்கிறது. மாதந்தோறும் திருவிழா இருப்பதால் அடுத்த மாத திருவிழாவை கணக்கிட்டு மண்டல பூஜை நடத்தப்படுவது இக்கோயில் வழக்கம். அதன்படி அடுத்த மாதம் 11ம் தேதி நவராத்திரி உற்ஸவம் துவங்குவதை முன்னிட்டு அதற்குள்ளாகவே மண்டல பூஜை நடத்தப்படுகிறது.
* ‘த.வெ.க., அரசு தலைமையிலான கூட்டணி அரசு நடத்திய முதல் கும்பாபிஷேகம்’ என அமைச்சர் விஸ்வநாதன் பெருமிதமாக கூறினார்.
* பாதுகாப்பு பணியில் இருந்த 3 போலீசார் உட்பட 6 பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
* மதுரை சேதுபதி பள்ளியிலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு விருந்தும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
* கூட்டத்தை பயன்படுத்தி திருட முயன்ற வடமாநில பெண்கள் மூவரை போலீசார் ‘ஏ.ஐ.,’ தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து கைது செய்தனர்.
* கேரளத்தில் இருந்து வந்த விஜயலட்சுமியின் 62, இரண்டரை பவுன் நகை திருடுபோனது.
* கூட்டத்தில் காணாமல் போன 7 வயது சிறுவனை, சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து, போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
* கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தினமும் கோயில் பகுதியில் 24 மணி நேரமும் துாய்மை பணியில் துாய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தினமலர் கோயில்
மதுரை ; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் ...
மதுரை ; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாலை கோவில் வளாகத்தில் மூலவர் மகாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக நிறைவு நிகழ்வாக பஞ்சமூர்த்திகள் வீதி உலா மற்றும் ஆச்சாரிய எஜமான உற்சவம் நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வீதி உலா வந்தனர். மாசி வீதிகளில் கைலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். வீதி உலா சென்ற பஞ்சமூர்த்திகளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல் படை வீடான திருப்பரங்குன்றம் புறப்பட்டுச் செல்லும் விடைபெறும் நிகழ்வும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வுகளை காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் மாலை நேரத்தில் பக்தர்கள் திரளாக குவிந்தனர்.
மதுரை; மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையும் காண பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வேத மந்திரம் முழங்க, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (செப்.17) கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பழமையான இத்தலத்தின் சிறப்பு தகவல்கள்..
* சக்தி பீடங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் கடந்த நுாற்றாண்டில் 1923, 1963, 1974, 1995, 2009ல் நடந்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் இன்று கோலாகலமாக நடக்கிறது.
* 1923க்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு பின், 1963 ஜூனில் காமராஜர் ஆட்சி காலத்தில் காஞ்சி மஹாபெரியவர் முன்னிலையில் கும்பாபிேஷகம் நடந்தது.
* 2009ல் நடந்த கும்பாபிேஷகத்தின் போது 320 உபயதாரர்கள் மூலம் 14 கோடி ரூபாய்க்கு திருப்பணி நடந்தன. பக்தர்கள் காணிக்கை 30 கிலோ தங்கத்தில் அம்மன் சன்னதி கோபுரத்திற்கு தங்க கவசம் செய்யப்பட்டது. இதன் அன்றைய மதிப்பு ரூ.4 கோடி
* இந்த முறை கோயில் நிதி ரூ.15.81 கோடியில் திருப்பணி நடந்துள்ளது. திருப்பணி, யாகசாலை பூஜைக்கு ரூ.21 கோடி உபயதாரர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
* கும்பாபிஷேகத்திற்காக கோயிலின் இரண்டு தங்க கோபுரம் உட்பட 14 கோபுர கலசங்களில் வரகு, நெல், கம்பு, உட்பட 9 வகை தானியங்கள் மொத்தம் 7 டன் (7 ஆயிரம் கிலோ )அளவில் நிரப்பப்பட்டுள்ளன.
இனி கோயிலுக்குள் வலம் வருவோம்...
* பரந்து விரிந்த மீனாட்சியம்மன் கோயில் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் கட்டப்படவில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விரிவாக்கம் செய்து கட்டப் பட்டுள்ளது. ஆதியில் இக்கோவிலை கட்டியவர் குலசேகர பாண்டியன் (1168 – 1175).
* மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. தங்க கோபுரங்களை சேர்த்தால் 14. கோபுரங்களில் சிவமகா புராணம், திருவிளையாடற் புராணம், லிங்க புராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கோபுரமும் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட வாயில் துாணோடு தொடங்கி படிப்படியாக பல அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
* சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே, கிழக்கு ஆடி வீதியை சார்ந்து அமைந்துள்ள கிழக்கு கோபுரம் தான் பழமையானது. இதன் உயரம் 153 அடி. மொத்தம் 1,011 சுதைகளுடன் ஒன்பது நிலைகளை கொண்டது. மாறவர்ம பாண்டியனால் (1216 – 1238ல்) கட்டப்பட்டது.
* வெளிப்புற 4 கோபுரங்களில் தெற்கு கோபுரம் தான் மிக உயரமானது. உயரம் 160 அடி. 9 நிலைகளை கொண்டு அமைந்துள்ள இந்த கோபுரத்தில் 1,511 சுதை சிற்பங்கள் உள்ளன. சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியாரால் 1559ல் கட்டப்பட்டது.
* மேற்கு கோபுரம் உயரம் 154.6 அடி. இதில் 1124 சுதை சிற்பங்கள் உள்ளன. சித்திரை வீதியில் இருந்து வாகனங்களில் பொருட்களை கோயிலுக்குள் எடுத்து செல்ல ஏதுவாக படிகள் இல்லாதபடி இக்கோபுர வாசல் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டியனால் (1315– 47ல்) கட்டப்பட்டது.
* வடக்கு கோபுரம் உயரம் 152 அடி. ஒன்பது நிலைகளை கொண்டது. இதற்கு மொட்டை கோபுரம் என மற்றொரு பெயர் உண்டு. காரணம் மற்ற கோபுரங்களுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த அளவாக 404 சுதை (சுண்ணாம்பு) சிற்பங்களே உள்ளன. இதன் கட்டுமானப்பணியை 1564–72ல் கிருஷ்ணப்ப நாயக்கர் தொடங்கினார். 1878 ல் வயிநகரம் செட்டியார் நிறைவு செய்தார்.
* நான்கு வெளிப்புற கோபுரங்கள் தவிர, புது மண்டபத்திற்கு கிழக்கே ஒரு கோபுரம் உண்டு. ராயகோபுரம் என அழைக்கப்படும். இந்த கோபுரத்தின் கட்டுமான பணி 57 அடி முதல் தளத்துடன் நின்று விட்டது. இதுதவிர, கோயிலுக்குள் உள்ள உள் கோபுரங்களும், மண்டபங்களும், சன்னதிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டன.
* கோயிலில் தினமும் முதல் பூஜை அம்மனுக்கே செய்யப்படுகிறது. பின்பு சொக்கநாதருக்கு பூஜைகள் தொடங்கும். தினமும் இரவு அம்மன் சன்னதியில் உள்ள பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரின் பாதுகைகள் சுவாமி சன்னதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தேறிய பின்பு நடை சாத்தப்படும்.
* கருவறையில் மீனாட்சி அம்மன், வலது திருக்கரத்தில் மலரை ஏந்தி, வலது தோளில் பச்சைக் கிளியுடன் காட்சி தருகிறார். அம்மனின் கீரிட அலங்காரம் நாயக்கர் காலத்து அமைப்பை போன்று இடது பக்கம் கொண்டை யிட்ட நிலையில் உள்ளது. பச்சை மரகதக் கல்லினால் ஆன அம்மனின் திருவுருவம் குழந்தை முகத்தோடும், அருள்பொழியும் கண்களோடும் காட்சி தருகிறது.
* இக்கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு நடக்கும் அபிேஷகங்களை பார்க்க முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் சுந்தரேஸ்வரருடன் அம்மன் எழுந்தருள்வார். அப்போது அபிேஷகத்தை கண் குளிர பார்க்கலாம்.
* மீனாட்சி கோயிலில் பல பகுதிகள் மண்டபங்கள் என குறிப்பிடப்படுகின்றன. தெற்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்ததும் 100 அடி துாரத்தில் உள்ளது, கண்ணாடி ஊஞ்சல் மண்டபம். வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உற்ஸவ மூர்த்திகளை அமர்த்தி ஊஞ்சலாட்டுவர்.
* இதற்கு அடுத்து உள்ளது கிளிக்கூண்டு மண்டபம். பல ஆண்டுகளுக்கு முன் இங்கு கூண்டுகள் அமைத்து, கிளிகள் வளர்க்கப்பட்டன. தற்போது இல்லை. இங்கு கலை நயமிக்க 28 துாண்களில் மகாபாரத கதாபாத்திரங்களான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், கர்ணன், ராமாயண கதாபாத்திரங்களான வாலி, சுக்ரீவன் சிலைகள் உள்ளன.
* கிழக்கு வாயிலில் நுழைந்து மீனாட்சி அம்மன் சன்னதி நோக்கி செல்லும் போது வரும் முதல் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம். எட்டு சக்திகளின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. எல்லா திருவிழாக்களின் போதும் உற்ஸவ மூர்த்திகள் இந்த வழியாக திருவீதி உலா சென்று, இதே மண்டபம் வழியாக மீண்டும் கோயிலுக்கு வந்து சேர்கின்றனர். அஷ்ட சக்தி மண்டபத்தில் இடது பக்க துாணில் திருமலை நாயக்கர் மன்னர் மனைவியருடன் இருக்கும் காட்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
* சுவாமி சன்னதி சுற்று பிரகாரங்களில் ஈசனின் 64 திருவிளையாடலில் 54 திருவிளையாடல் காட்சிகள் சுதை (சுண்ணாம்பு) சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
* பொற்றாமரை குளம், நந்திதேவரின் வேண்டுகோளின்படி பெருமான் தமது சூலத்தை பூமியில் ஊன்றி உண்டாக்கியது என்பர். இந்திரன் கடம்பவனத்தை (மதுரையை) அடைந்த போது இறைவனை பூஜிக்க பொன் தாமரைகளை கொண்ட தடாகம் ஒன்றை அமைத்ததாகவும், அதுவே பொற்றாமரை குளம் எனப்படுகிறது. குளத்தின் ஒவ்வொரு புறத்திலும் படிக்கட்டுகளும், பிரகாரங்களும் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு மன்னர்களால் கட்டப்பட்டது. திருவிளையாடற் புராண நிகழ்ச்சிகள் நடந்தேறிய சிறப்பை பெற்றுள்ள பொற்றாமரை குளத்தில் மீன்கள் எப்போதும் இருந்ததில்லை.
* 2003ல் காஞ்சி பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இணைந்து பொற்றாமரை குளத்தில் பொன் தாமரையை மிதக்க விட்டனர்.
* சுவாமி சன்னதி பிரகாரத்தில் உள்ள லிங்கங்கள்: சகஸ்ர லிங்கம், ஏகாதச லிங்கம், சோடச லிங்கம், பஞ்சமுக லிங்கம், ஜுர லிங்கம், சுந்தர மகாலிங்கம், காசி விஸ்வநாதர், ஆகாச லிங்கம், நிருதி லிங்கம், பூவ லிங்கம்.
* கிழக்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்து, அம்மனின் சன்னதி நோக்கி செல்லும் போது, 25 அடி உயர திருவாட்சி உள்ளது இது 108 எண்ணெய் விளக்குகளை கொண்டுள்ளது. இதை மருது சகோதரர்கள் கோயிலுக்கு வழங்கி உள்ளனர். இன்றும் சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் கட்டளைகளை நிறுவி இந்த விளக்குகள் ஏற்றப்பட்டு வருகிறது.
* சுந்தரேஸ்வரர் சன்னதியை தாங்கி நின்று, காவலாக இருப்பது போல எட்டு வெள்ளை யானைகள் சிற்பங்கள் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளன. சுவாமி சன்னதிக்குள் புண்டரீகன் (கபிலன்), ஐராவதம் என இரு யானைகளும், சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு வெளியே வந்ததும், தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு இருபுறமும், வாமனன், குமுதன் என இரு யானைகளும், சுவாமி சன்னதியை வலம் வரும் போது, லிங்கோத்பவர் சன்னதியின் இரு புறமும் அஞ்சனன், புஷ்பதந்தன் யானைகளும், துர்கை அம்மன் சன்னதிக்கு இரு புறம் சுப்ரீதிகன், சர்வ பெளமன் என, இரு யானைகளும் பக்கச் சுவற்றுக்கு உள்ளிருந்து வெளியே வந்து பார்ப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
* ராஜசேகர பாண்டிய மன்னருக்காக பெருமான் கால் மாற்றி, அதாவது இடது காலை ஊன்றி, வலது காலை துாக்கி மாற்றி ஆடினார். இப்பெருமானே சுவாமி சன்னதியில் 10 கரங்களுடன் வெள்ளி அம்பலவாணராக காட்சி தருகிறார்.
* சுவாமி சன்னதி நேர் எதிரே கோயிலின் முக்கிய திருவிழாக்களின் கொடியேற்றம் நடக்கும் கம்பத்தடி மண்டபம் உள்ளது. கொடி மரத்தை சுற்றி சிவபெருமானின் சிறப்புமிக்க 25 வடிவங்கள் தத்ரூப சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் காலசம்ஹார மூர்த்தி, நடராஜர், சந்திர சேகர மூர்த்தி, ரிஷபாரூட மூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், சங்கர நாராயணர், தட்சிணா மூர்த்தி, பிட்சாடனர், வீரபத்திரர், சோமாஸ்கந்த மூர்த்தி. ஒவ்வொறு சிற்பத்தையும் நின்று ரசித்து பார்த்தால் பிரமிக்க வைக்கும். இங்குள்ள திருக்கல்யாண சிற்ப துாணின் கீழேயும், இன்னொரு புறத்தில் சோமாஸ்கந்த மூர்த்தி சிற்பத்துாணின் கீழேயும் பெருமாளின் தசாவதார காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
* சொக்கலிங்கப் பெருமான் தன் பக்தை வந்தியம்மைக்காக பிட்டமுது உண்டு, வைகைக் கரையில் கூலி ஆளாக மண் சுமந்த சிற்பமும், வந்தியம்மை சிலையும் கம்பத்தடி மண்டபத்தில் அனுமன் சிலைக்கு எதிரே உள்ளது.
* மீன் உணவை நீக்கி தன்னை வழிபட்ட நாரைக்கு சுவாமி வரம் அருளி முக்தி கொடுத்து அருளிய சிற்பம், கம்பத்தடி மண்டபத்தில் அகோர வீரபத்திரருக்கு இடது புறத்தில் உள்ளது.
* கம்பத்தடி மண்டபத்திலிருந்து வெளியே வந்ததும், புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் வீர வசந்தராயர் மண்டபம் 400 ஆண்டுகள் பழமையானது. பரப்பு 7,000 சதுரஅடி. 2018ல் நடந்த தீ விபத்துக்கு பின் ரூ.38.30 கோடியில் புனரமைப்பு பணி 8 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்து, கடந்த 30ல் திறக்கப்பட்டது. மொத்தம் 79 துாண்கள், நடுவில் நந்தி சிலை கொண்ட இந்த மண்டபத்தில் முன்பு பூஜை பொருட்கள், பிளாஸ்டிக், கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருந்தன.
* தமிழர் கட்டிடக்கலை, சிற்ப கலைக்கு மிக சிறந்த சான்றாக உள்ளது, ஆயிரம் கால் மண்டபம். 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள 985 துாண்களில் பிரமிக்க வைக்கும் 24 யாளி துாண்கள், 12 அலங்கார வேலைப்பாடு துாண்கள், 13 கடவுளின் திருவுருவ துாண்கள் அடக்கம். மண்டபத்தின் நடுவில் நடராஜர் சிலை உள்ளது.
* கோயிலின் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசை எழுந்திடும் 5 இசைத் துாண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் 2 இசை துாண்களும் உள்ளன.
* 33,000 சிற்பங்கள் உள்ள மீனாட்சி கோயில் புதிய உலக அதிசயங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
* மீனாட்சி கோயிலுக்குள் 15க்கும் மேற்பட்ட விநாயகர்கள் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விநாயகர்கள்: கிழக்கு வாயிலில் நுழைந்ததும் அஷ்டசக்தி மண்டபத்தில் அருள்புரிகிறார் வல்லப கணபதி. வல்லபையை இடது மடியில் அமர வைத்து, தனது 10 கரங்களிலும் ஆயுதம் ஏந்தியபடி மூஞ்சுறு வாகனத்தில் அமர்ந்துள்ளவாறு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை கடந்து, பிரமாண்ட திருவாட்சியை தாண்டியதும் உள்ள முதலி மண்டபத்தில் அருள்புரிகிறார் நர்த்தன விநாயகர்.
* மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை கட்ட தெப்பக்குளத்தில் மண் அள்ளிய இடத்தில் கிடைத்த எட்டு அடி விநாயகர் சிலை தான், முக்குறுணி விநாயகர் என்றும், பின் அதை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
* கோயிலுக்குள் தெற்கு ஆடி வீதியில், நுாலகம், தேவாரப் பாடசாலை, திருப்புகழ் சபை, தெய்வ நெறிக் கழகம், பன்னிரு திருமுறை மன்றம் உள்ளன.
* மேற்கு ஆடி வீதியில் கோசாலை உள்ளது. மக்களால் தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் இங்கே பராமரிக்கப்படுகின்றன.
* வடக்கு ஆடி வீதியில் திருவள்ளுவர் கழகம், யஜூர் வேத பாடசாலை, சிருங்கேரி சங்கரமடம், சமரச சன்மார்க்க சபைகள் உள்ளன.
* கிழக்கு ஆடி வீதியில் வன்னிமரத்தடி விநாயகர் சன்னதியை சுற்றி 9 விருட்சங்கள் உள்ளன. நாவல்மரம், அரசமரம், வேப்பமரம், வன்னி மரம், வில்வம், நெல்லி, அத்தி, பூவரசு. இவற்றை சுற்றி வந்தால் நவகிரகங்களை சுற்றிய பலன் உண்டு.
* மீனாட்சியம்மன் கோயிலில் 12 மாதமும் திருவிழா தான்... சித்திரை பிரம்மோற்ஸவம், ஆடி முளைக்கொட்டு உற்சவம், ஆவணி பிட்டுத்திருவிழா, கார்த்திகை 10 நாள் தீபத்திருவிழா, தை 12 நாள் தெப்ப திருவிழா, மாசி மண்டல உற்ஸவம், வைகாசி வசந்த உற்ஸவம், ஆனி உஞ்சல் உற்ஸவம், புரட்டாசி 9 நாள் நவராத்திரி விழா, ஐப்பசி ஆறு நாள் கோலாட்ட திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்ஸவம் அஷ்டமி சப்பரம், பங்குனி 10 நாள் கோடை வசந்த விழா, பவித்ரோத்ஸவம்.
* மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னர்களின் குலதெய்வம். அவர்களின் அடையாளமான வேப்பம் பூ மாலையை பட்டாபிேஷகத்தின் போது அம்மனுக்கு அணிவது சிறப்பு.
தினமலர் கோயில்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை வடக்கு மாசிவீதியில் ...
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை வடக்கு மாசிவீதியில் உள்ள சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில் இன்று காலை 7:00 மணி முதல் இடைவெளி இல்லாமல் மதியம் வரை விருந்து அளிக்கப்படுகிறது. இதில் இனிப்பு, வெண் பொங்கல், வெஜிடபிள், தக்காளி, தயிர்சாதம், உருளைக்கிழங்கு, காரக்கறி, வடை வழங்கப்பட உள்ளது. தவிர பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே அன்னதானம் வழங்க உள்ளன. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்ட மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரெங்கும் இரவிலும் வண்ணமயமாய் அலங்கார விளக்குகள் ஒளிவீசுகின்றன. எங்கிருந்தும் கோயில் கோபுரங்களை காணும் வகையில் லேசர் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருக்கின்றன. தங்கள் வீட்டு விழாவாக எண்ணி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தினமலர் கோயில்
மீன் போல துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்கவைக்கும் அழகன் என்பதால் சிவனுக்கு ‘சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்’ என்றும் சிறப்புப் பெயர் உண்டானது.மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ ...
தினமலர் கோயில்
அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உங்களுக்கு எப்போதும் துணையாக வருவாள் தாய் மீனாட்சி. மாமதுரை அங்கயற்கண் நாயகியே! அம்மையே – துங்கஒளியே! ...
தினமலர் கோயில்
மதுரைக்கும், சிருங்கேரி மடத்திற்கும் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே தொடர்புண்டு. அவர் மதுரை மீனாட்சி அம்மன் மீது பஞ்சரத்தினம், அஷ்டகம், நவரத்தின மாலை துதிகளை பாடியுள்ளார். வித்யாரண்யர் வித்யாரண்யரின் ...
தினமலர் கோயில்
தமிழகத்திலுள்ள காஞ்சி காமகோடி பீடமும், கர்நாடகாவிலுள்ள சிருங்கேரி சாரதா பீடமும் பிரசித்தியான மடங்களாகும். இவை ஹிந்து நெறியை போற்றவும், சனாதன தர்மத்தை எங்கும் பரப்பவும் ஆதிசங்கர சுவாமிகளால் இப்பாரத தேசத்தில் ...
தினமலர் கோயில்
* சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தலம். * மூவேந்தர் போற்றிய புண்ணியத் தலம். * பாண்டிய மன்னர்களின் தலைநகராக இருந்த தலம்.* மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புகளை பெற்ற தலம். * சைவத்திற்கும் வைணவத்திற்கும் பாலமாக ...
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வேத மந்திரம் முழங்க, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (செப்.17) கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
மீனாட்சி கோயில் கும்பாபி ஷேகம் 2009 ஏப்.8ம் தேதி நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 2018 பிப்.2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தாலும், சீரமைப்பு பணி தாமதமாக நடந்ததாலும் 17 ஆண்டுகள் கழித்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் 8ம் தேதி சாந்தி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் துவங்கின. கோயில் முழுவதும் உள்ள சன்னதிகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது சிரமம் என்பதால், நேற்று அம்மன், சுவாமி சன்னதிகளை சுற்றியுள்ள பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு விமானத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து பத்தாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை 3.35 மணிக்கு கும்பாபிஷேக பணி விக்னேச்வர பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து புண்யாஹவாசனம் நடைபெற்று பன்னிரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, காலை 7.40 மணிக்கு தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7.55 மணிக்கு மூலவர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேகமும், காலை 8.10 மணிக்கு மூலவர் ஸ்ரீ சுந்தரேசுவரர் சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் வேதங்கள், திருமுறைகள் ஒலிக்க கோலாகலமாக நடந்தது. அதனைத்தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. காலை 10.00 மணிமுதல் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
* கும்பாபிஷேகத்திற்காக காசியில் இருந்து 1,008 லிட்டர் கங்கை புனித நீரும், 7 புண்ணிய நதிகளில் இருந்தும் 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டிருந்தது.
* இரவு 7.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மாசி வீதியில் உலா வந்து வந்து அருள்பாலிக்க உள்ளனர்.
* கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், செப்.,18ம் தேதி வரை கோவில் பகுதியில் ரோட்டோர கடைகள் வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
* பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், மோர் பாக்கெட் அடங்கிய பிரசாதப் பை வழங்கப்பட்டது.
* ஆடி வீதிகளில் 11 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.
* முக்கிய இடங்களில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண 51 மெகா திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
*புதுமண்டப கட்டுப்பாட்டு அறையில் இருந்து 448 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக நாளில் நலம், வளம், மகிழ்ச்சி பெருகட்டும் என்று முதல்வர் விஜய் கூறி உள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை; தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும். நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.
மதுரை: மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை காண திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்க பல்லாக்கில் புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது மீனாட்சி அம்மன் கோவில் வந்த சுப்ரமணியசாமி தெய்வானை உடன் கிழக்கு சன்னதி வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றனர்.
தினமலர் கோயில்
மதுரை: மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை காண திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்க பல்லாக்கில் புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் ...
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது. நாளை காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.விழா செப்டம்பர் 8 அன்று சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று பத்தாம் கால வேள்வி பூஜை பிரதான யாகசாலையில் நடைபெற்று வருகிறது. யாகசாலை பூஜையில் கும்ப வடிவில் சுவாமி சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ள நிலையில் இன்று கோயிலில் பரிவார மூர்த்திகள் எனப்படும் இதர தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நாளை காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை 3.35 மணிக்கு மங்கல இசையுடன் கும்பாபிஷேக சடங்குகள் துவங்கியது. தொடர்ந்து விசேஷ சந்தி, விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பத்தாம் கால வேள்வி (பரிவார யாகசாலை), த்ரவ்யாஹுதி, பரிவார யாகசாலை மஹா பூர்ணாஹுதி நடைபெற்று
பரிவார கலசங்கள் புறப்பாடாகியது. தொடர்ந்து பரிவார மூர்த்திகளான பிற தெய்வ சன்னிதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நாளை காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று அதிகாலை, 5:00 மணி முதல், 6:00 மணிக்குள் இதர தெய்வ சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்ததும், பக்தர்கள் ஒரே நேரத்தில் மேல்தளத்தில் இருந்து கீழே வருவதை தவிர்க்க, பகுதி பகுதியாக விடப்பட உள்ளனர். இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்து, கோவிலில் இருந்து வெளியே பக்தர்கள் வருவதை கணக்கிட்டு, நாளை காலை, 10:00 மணிவரை சித்திரை வீதிகளில், பாஸ் இல்லாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுதும் குற்றத்தடுப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளின் முகத்தை மொபைல் போனில் அடையாளம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,’’ என்றார். கும்பாபிஷேகத்தன்று துாய்மை பணிக்கு வெளிமாவட்டங்களில் இருந்து 1,000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கீழவெளிவீதி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில், ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது. 650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக ஐந்து தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனை சார்பில், இன்று முதல் 18ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செப்., 17 முதல் 20 வரை, கட்டண தரிசனம் கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் கைகளில் அடையாள ‘டேக்’: மதுரை நகரின் முக்கிய இடங்களில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண, 51 மெகா திரைகள் அமைக்கப்பட்டுள்ளன l இரவில் எங்கிருந்தாலும் கோபுரங்களை காணும் வகையில், கோபுரத்தில் இருந்து லேசர் ஒளிக்கதிர்கள் வீச செய்துள்ளனர் l கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நகர் முழுதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது l சிறப்பு பணிக்காக வீரராகவராவ் உட்பட 3 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை, தீயணைப்பு மாவட்ட அதிகாரி வெங்கட்ரமணன் உட்பட 100 துறை அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் l கும்பாபிஷேக புனிதநீரை கோவில் வளாகம், ஆடி வீதிகள், சித்திரை வீதிகளில், ‘ஸ்பிரிங்க்ளர்’ மூலம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது l குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க, அவர்களின் கைகளில் அடையாள ‘டேக்’ பொருத்தப்பட உள்ளது l அவசர கால தொடர்புக்கு இலவச எண்கள் 1800 -425 -6781 / 1800 -425- 6782 அறிவிக்கப்பட்டுள்ளன.
தினமலர் டிஜிட்டல் தளத்தில் கும்பாபிஷேக சிறப்பு தொகுப்புகள்; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக சிறப்பு தொகுப்புகளை தினமலர் டிஜிட்டல் தளத்தில் பார்க்கலாம். www.temple.dinamalar.com/ meenakshi என்ற இணைய தளத்தில் மீனாட்சி கோயில் தொடர்பான தகவல்களை பார்க்க இத்துடன் உள்ள QR codeஐ ஸ்கேன் செய்யலாம்.
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் எட்டாம் கால யாகசாலை பூஜை இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. யாகசாலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கும் 17ஆம் தேதி கோவில் கோபுரங்களுக்கும் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் இன்று காலை மங்கள இசை தொடர்ந்து எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் யாக சாலை பூஜையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வரக்கூடிய நிலையில் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து யாகசாலை பூஜைக்கு வருகை தந்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து செல்கின்றனர். கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கானோர் வருவர் என்பதால், அதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில், 6500 போலீசார், 400க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., அமைக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6,500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் இருந்து குற்றத் தடுப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போலீசாரின் மொபைல் போனில் முகத்தை அடையாளம் காணும் எப்.ஆர்.எஸ்., செயலி இருக்கும். அதன்மூலம் சந்தேக நபர்களை புகைப்படம் எடுத்து செயலியில் உள்ள குற்றப் பின்னணி உடைய நபர்களோடு சரி பார்ப்பர். கோவிலுக்கு உள்ளே 171, வெளியே 70 எப்.ஆர்.எஸ்., கேமராக்களுடன் 270 சி.சி.டி.வி., அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க, அவர்களுக்கு மொபைல் போன் எண்ணுடன் கூடிய ‘டேக்’ வழங்குகிறோம்.
மாசி, சித்திரை, ஆவணி மூலவீதிகளை ‘செக்டார்’களாக பிரித்துள்ளோம். இதன்மூலம் கூட்ட நெரிசல் இன்றி பக்தர்கள் எளிதாக செல்ல முடியும். பாஸ் உள்ளவர்கள் 10 ஆயிரம் பேர், பணியாளர்கள் 4,000 பேர் இருப்பர் என்பதால் காலை 10:00 மணி வரை சித்திரை வீதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
அவர்கள் வெளியேறிய பின் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். வீட்டு உரிமையாளர்கள் ஆவணி மூலவீதி, சித்திரை வீதியிலும், மாசி வீதியில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
டிராபிக் பிரிவு மூலம் வழங்கப்பட்டுள்ள பச்சை நிற வி.வி.ஐ.பி., பாஸ் மூலம் தளவாய் தெரு வழியாக மீனாட்சி கார் பார்க்கிங் வரை வர முடியும். இளம் நீல நிற பாஸ் உள்ளவர்கள் மாசி வீதி அம்சவல்லி சந்திப்பை அடுத்து காமராஜர் ரோடு பகுதிகளில் பார்க்கிங் செய்யலாம். இதுதவிர பாஸ் இல்லாதவர்கள் வெளி வீதிகள், மாரட் வீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரைக் கல்லுாரி, வைகை தென்கரை பகுதிகளில் பார்க் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு செய்தார். பின் யாகசாலை பூஜையில் மனைவியுடன் பங்கேற்றார். அவருக்கு தருமை ஆதினம் நினைவுப் பரிசு வழங்கினார்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரங்களுக்கு நிலைமாலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் செப். 17ல் நடக்கிறது. இதையொட்டி கோவிலின் பெரிய கோபுரங்கள் உட்பட 12 கோபுரங்களுக்கும் சூட்டுவதற்காக 4.5 டன் வண்ண மலர்களை கொண்டு பிரமாண்ட நிலை மாலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு, ஓசூர், திருச்சி, நிலக்கோட்டை, திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து ஐஸ்வர்ய சாமந்தி, புஸ்கின் வெள்ளை, சாக்லேட் சாமந்தி, விரிச்சி பூ, ப்ளூ ஆஸ்திரேலியா, ரெட் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மலர்கள் வரவழைக்கப்பட்டு கிழக்கு கோபுரம் எதிரேயுள்ள புதுமண்டபத்தில் மாலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பூக்களின் நறுமணத்துடன் விழாக்கோலம் பூண்டுள்ளது. செப். 16 வரை நடைபெறும் இப்பணிக்கு பின் வடக்கு கோபுரம் அருகேயுள்ள முனீஸ்வரர் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று கோபுரங்களில் நிலைமாலை சூட்டப்படும்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.,17 சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு மெகா விருந்து அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொருளாளர் ஹரி மணிகண்டன் தெரிவித்துள்ளதாவது: டிரஸ்ட் சார்பில் சேதுபதி பள்ளியில் மீனாட்சி திருக்கல்யாண விருந்து நடத்தி வருகிறோம். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.,17 காலை 7:00 மணி முதல் இடைவெளி இல்லாமல் மதியம் வரை இனிப்பு, வெண் பொங்கல், வெஜிடபிள், தக்காளி, தயிர் சாதம், உருளைக்கிழங்கு, காரக்கறி, வடை வழங்கப்படுகிறது.
விருந்துக்கு தேவையான அரிசி, பருப்பு, ஆயில், நெய் போன்றவற்றை பக்தர்கள் கொடுத்து வருகின்றனர். காய்கறிகளை பரவை மார்க்கெட், மாட்டுத் தாவணி மார்க்கெட் வியாபாரிகள் கொடுக்கின்றனர். காஸ் சிலிண்டர்களை காஸ் ஏஜென்சி வியாபாரிகள் சங்கம் தருகின்றனர். அறுசுவை விருந்துக்கு தேவையான பொருட்களை இன்று (செப்.,14) முதல் செப்.,16 வரை விருப்பமுள்ளவர்கள் சேதுபதி பள்ளியில் வழங்கலாம். உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெற்று இவ்விருந்து நடத்தப் பட உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரை மீனாட்சி அம் மன் கோயில் கும்பாபிஷே கம் செப்.,17 ல் நடப்பதை முன்னிட்டு செப்.,20 வரை பக்தர்கள் இலவச தரிசனத் திற்கு அனுமதிக்கப்படும் நிலையில் மண்டல பூஜை வரையும் இச்சலுகையை அளிக்க அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. இக்கோயில் கும்பா பிஷேகம் 17 ஆண்டுக ளுக்கு பிறகு செப்., 17 ல் பாதுகாப்பு நடக்கிறது. லட்சக்கணக் கானோர் பங்கேற்பார்கள் என்பதால் ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. சிறப்பு ஏற் பாடுகளை செய்ய நியமிக் கப்பட்டுள்ள 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நாளை முதல் பணிகளை ஆரம்பிக்கின்றனர்.
கும்பாபிஷேகத்தை காண 7 வண்ண 'பாஸ்'கள் வழங்கும் பணி துவங்க உள்ளது.
உபயதாரர்கள், கட்ட ளைதாரர்கள், நீதிபதிகள் என 5 ஆயிரம் பேருக்கு 'பாஸ்' வழங்கப்பட உள் ளது. பொதுமக்கள் 2 ஆயிரம் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன் லைனில் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே கும்பா பிஷேகத்திற்கு பிறகு அம் மனையும், சுவாமியையும் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் செப்., 17 முதல் 20 வரை இலவச தரிசனம் என அறநி லையத்துறை அறிவித்துள் முதல் ளது. அதேநேரம் செப்., 18 அக்.,2 வரை மண்டல பூஜை நடக்கிறது. இதையும் காண பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். அப்போதும் கூட்ட நெரி சலை தவிர்க்க அக்.,2 வரை இலவச தரிசனத் திற்கு அனுமதிக்கலாமா என அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது. இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என ஹிந்து வழக்கறிஞர் முன்னணி ஒருங்கிணைப் பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். கும்பாபிஷேகத்தை யொட்டி செப்., 17 காலை முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தனியார் டிரஸ்ட் சார்பில் மெகா விருந்து பக்தர்க ளுக்கு வழங்கப்படுகிறது.
மதுரை: அசாம் மாநிலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் புது வரவாக ஐந்து வயது பெண் யானை 'துர்கா' வந்துள்ளது.
அசாமில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் புது வரவாக வந்த ஐந்து வயது பெண் யானை 'துர்கா' செப்டம்பர் 2026-ல் வந்து சேர்ந்தது. அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த யானை மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த துர்கா யானைக்கு, கோவில் பணியாளர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய யானை வருகையால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வனத்துறையின் உரிய தடையின்மைச் சான்று (NOC) மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த யானை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கும் 17ஆம் தேதி கோவில் கோபுரங்களுக்கும் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் இன்று காலை மங்கள இசை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் யாக சாலை பூஜையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வரக்கூடிய நிலையில் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து யாகசாலை பூஜைக்கு வருகை தந்து யாகசாலையை பார்த்து பக்தி பரவசம் அடைந்த நிலையில் அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு செல்கின்றனர்.
தினமலர் கோயில்
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கும் 17ஆம் தேதி கோவில் கோபுரங்களுக்கும் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ள ...
தினமலர் கோயில்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 ல் நடக்கிறது. இதை கோயில் மேல்தளத்திலிருந்து காண வி.வி.ஐ.பி.,க்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட 7 ஆயிரம் பேருக்கு 7 வகைகளில் பாஸ் வழங்கப்படுகிறது. 2 ஆயிரம் பேர் முன்பதிவு ...
தினமலர் கோயில்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்., 17ல் நடக்கிறது. இதை நேரில் காண, 7 வண்ணங்களில் ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தன்று ‘பாஸ்’ உள்ளவர்கள் எந்தெந்த வழிகளில் செல்ல வேண்டும் என ...
தினமலர் கோயில்
– நமது நிருபர் –: நம் பாரத நாட்டில் ஸனாதன தர்மத்துக்கு அன்னியர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் அனைத்தையும் அகற்றுவதற்காக இறைவன் தானே அந்தந்தக் காலங்களில் அவதரித்தும் தனது அம்சமாக மஹா புருஷர்களை அவதரிக்க செய்தும் இந்த ...
தினமலர் கோயில்
மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கும் 17ஆம் தேதி கோவில் கோபுரங்களுக்கும் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ள ...
தினமலர் கோயில்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், செப்., 17ல் நடப்பதை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை பூஜை தொடங்கியது.இக்கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின், செப்., 17 காலை, 7:40 மணி முதல், 8:10 மணிக்குள் நடக்கிறது. ...
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், செப்., 17ல் நடப்பதை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை பூஜை தொடங்கியது.
இக்கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின், செப்., 17 காலை, 7:40 மணி முதல், 8:10 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி, நேற்று மாலை, முதல் கால யாகவேள்வி தொடங்கியது. கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கானோர் வருவர் என்பதால், அதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் மேல்தளத்தில் இருந்து காண வி.வி.ஐ.பி.,க்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட 7,000 பேருக்கு, ஏழு வகை ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. 2,000 பேர் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக madurai meenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளம் வழியாக இன்றிரவு, 9:00 மணி வரை முன்பதிவு செய்யலாம். ஒருவர் அதிகபட்சம், இரண்டு ‘பாஸ்’ பெற விண்ணப்பிக்கலாம். கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவோருக்கு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். செப்., 14 மாலை, 6:00 மணிக்குள் அதை காண்பித்து, மதுரை எல்லீஸ் நகரில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில், யாத்ரி நிவாஸ் அலுவலகத்தில் ‘பாஸ்’ பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் அறிவிப்பு கும்பாபிஷேகம் தொடர்பான தகவல்கள், வழிகாட்டுதல், அவசர உதவிகளை மக்கள் பெறும் வகையில் 1800 425 6781, 1800 425 6782 ஆகிய இலவச எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 நடப்பதை முன்னிட்டு அழைப்பு விடுத்து, சிருங்கேரி ஜகத்குரு பாரதீ தீர்த்த சுவாமிகள் மற்றும் விதுசேகர பாரதீ மகா சுவாமிகளிடம் கோயில் அதிகாரிகளும் அர்ச்சகர்களும் ஆசிபெற்றனர்.
700 ஆண்டுகளுக்கு முன் அன்னியர்கள் கோயில்களை சிதைத்து தர்மத்தை அழிக்க முற்பட்ட சூழலில், சிருங்கேரி சாரதா பீடத்தின் 12வது சங்கராசாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஹரிஹரர் மற்றும் புக்கர் அரசர்கள் மூலம் விஜயநகரப் பேரரசை ஸ்தாபித்து தர்மத்தை காப்பாற்றினார். அந்த அரசர்கள் அன்னியர்களை வீழ்த்தி கோயில்களை காப்பாற்றி பூஜைகள் தவறாமல் நடக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.
புக்கரின் மகன் குமார கம்பண்ணர் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை உள்ளிட்ட கோயில்களில் தடைபட்டிருந்த வழிபாடுகள் தொடர ஏற்பாடு செய்தார். அவரது கனவில் மீனாட்சி அம்மன் தோன்றி தன் கோயிலில் பூஜைகள் தடைப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அதை சரிசெய்ய சொன்னது வரலாறு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிருங்கேரி மடத்திற்கு சென்று, சுவாமிகளுக்கு அறநிலையத்துறை, கோயில் சார்பில் அறங்காவலர் பி.கே.எம். செல்லையா, உதவிகமிஷனர் மெய்வேல் சீனிவாசன், சிவாச்சாரியார்கள் சண்முகசுந்தரம், கார்த்திகேயன் முறைப்படி அழைப்பு விடுத்தனர். அவர்களிடம் ‘சாதுர்மாஸ்ய விரத அனுஷ்டானத்தில் இருப்பதால் வரவாய்ப்பு இல்லை. பின்னர் அம்மனை தரிசிக்க வருகிறேன்’ என சுவாமிகள் ஆசி வழங்கினார்.
தினமலர் கோயில்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 நடப்பதை முன்னிட்டு அழைப்பு விடுத்து, சிருங்கேரி ஜகத்குரு பாரதீ தீர்த்த சுவாமிகள் மற்றும் விதுசேகர பாரதீ மகா சுவாமிகளிடம் கோயில் அதிகாரிகளும் அர்ச்சகர்களும் ...
தினமலர் கோயில்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. செப்.,17 கும்பாபிஷேகம் வரை இங்கு அம்மன், சுவாமி மூலவர்களை கும்பவடிவில் தரிசிக்கலாம்.மீனாட்சி கோயில் ...
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. செப்.,17 கும்பாபிஷேகம் வரை இங்கு அம்மன், சுவாமி மூலவர்களை கும்பவடிவில் தரிசிக்கலாம்.
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடக்கிறது. அன்று காலை 7:40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை 7:55 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், காலை 8:10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று கும்பாபிஷேக சடங்குகளில் பங்கேற்கும் சிவாச்சாரியர்களுக்கு பொற்றாமரைக்குளத்தில் ஆச்சார்ய ஸ்நானம் நடந்தது. இதைதொடர்ந்து இன்று மாலை 4:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை வேத மந்திரம் முழங்க துவங்கியது. முன்னதாக மாலை 4.30 மணிக்கு விக்னேச்வர பூஜை
புண்யாஹவாசனம் (புனித நீர் தெளித்தல்) கும்பாலங்காரம் (திருக்குட வழிபாடு) நடைபெற்றது. தொடர்ந்து இறை சக்தியை திருக்குடத்தில் எழுந்தருளச் செய்யும் கலாகர்ஷணம் மற்றும் யாகசாலை ப்ரவேசம், கடஸ்தாபனத்தை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முதற்கால வேள்வி பூஜையை துவங்கினர். யாகசாலை வேள்வி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
184 யாக குண்டங்கள்; கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள், 56 யாக சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. கோவிலில் உள்ள 514 சுவாமிகளுக்கு தேவையான சிறிய, பெரிய பித்தளை கலசங்களால் நீர் நிரப்பப்பட்டுள்ளன. கலசத்தில் நீர் நிரப்புவதற்காக காசியில் புண்ணிய நதியான கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனித நீர் வந்துள்ளது. அதே போன்று 7 புண்ணிய நதிகளில் இருந்தும் 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தவிர 9 வகையான தானியங்கள், மூலிகை பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் என 96 வகையான ஹோம பொருட்கள் மூலம் யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் யாக வேள்வி நடக்கிறது. செப்.,16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கோயிலின் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
தினமலர் கோயில்
மதுரை; மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள்ளாக நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை காண்பதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என ...
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) மாலை யாகசாலை பூஜை துவங்குகிறது. செப்.,17 கும்பாபிஷேகம் வரை இங்கு அம்மன், சுவாமி மூலவர்களை கும்பவடிவில் தரிசிக்கலாம்.
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடக்கிறது. அன்று காலை 7:40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை 7:55 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், காலை 8:10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று கும்பாபிஷேக சடங்குகளில் பங்கேற்கும் சிவாச்சாரியர்களுக்கு பொற்றாமரைக்குளத்தில் ஆச்சார்ய ஸ்நானம் நடந்தது. இதைதொடர்ந்து இன்று மாலை 4:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. தினமும் யாக வேள்வி நடக்கிறது. செப்.,16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கோயிலின் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை கோயிலுக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை எழுந்தருளுகின்றனர். செப்.,17 மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மஹாஅபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
யாகசாலையில் மூலவர்கள்; கோயிலில் இன்று மதியம் வரை அம்மன், சுவாமி மூலவர்களை பக்தர்கள் தரிசிக்கலாம். இதன்பிறகு செப்., 17 வரை யாகசாலையில் கும்பவடிவில் எழுந்தருள செய்திருக்கும் மூலவர்களை தரிசிக்கலாம். கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு கோயில் சார்பில் ரூ.5 கோடிக்கு குழு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகளுக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் உபயமாக வழங்கலாம். விருப்பமுள்ளவர்கள் கோயில் வடக்காடி வீதி திருவள்ளுவர் கழகத்தில் வழங்கலாம்.