கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. மூலவர் முருகன் கிழக்கு பார்த்த திருக்கோயில். விமானம் தஞ்சை பெருவுடையார் கோயில் விமான அமைப்பு, பாண்டுரங்கன் கோயில், விமானம் வடநாட்டு கோயில் விமான அமைப்பில் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
கந்தசஷ்டி விரதம் இருந்து திருமணம் ஆகாதவர்கள், திருக்கல்யாண விழாவில் பங்குபெற்றால் திருமணதடை நீங்கும்.
நேர்த்திக்கடன்:
திருமணத்தடை நீங்க கந்தசஷ்டிப் பெருவிழாவில் மறுநாள் திருமண உற்சவ விழாவில் பங்குபெற்று தங்களால் இயன்றதை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
முப்பெரும் சமாதி வளாகம், ஆதின குருமுதல்வர், திருப்பெருந்திரு, இராமானந்த சுவாமிகள் கவுமார மடாலய நிறுவனர், தவத்திரு. கவிக்கடல் கந்தசாமி சுவாமிகள் இரண்டாவது குருமகா சந்நிதானங்கள், தவத்திரு கஜபூசை சுந்தர சுவாமிகள், மூன்றாவது குருமகா சந்நிதானங்கள் அமைந்துள்ளன. தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில், சித்தி விநாயகர், கருணாம்பிகை, உடனுறை அவிநாசியப்பர், பாண்டுரங்கன், சூரியனார், சனீஸ்வரர், பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியஒளி படுகிறது.
இருப்பிடம் : கோவை-காந்திபுரத்திலிருந்து சத்திய மங்கலம் செல்லும் வழியில் 8 கி.மீ. துõரத்தில் சரவணம்பட்டி. அங்கிருந்து துடியலுõர் செல்லும் வழியில் 1.5 கி.மீ. துõரத்தில் சின்னவேடம்பட்டியில் கோயில் உள்ளது.