Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்ரீ விநாயகர் (விக்னேஸ்வர்)
  ஊர்: ஈச்சனாரி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திருவிழா, சித்திரைத் திருவிழா 2 நாள் திருவிழா. மாதத்தின் கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் தைப்பூசம், கார்த்திகை தீபம்  
     
 தல சிறப்பு:
     
  5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி- 641021. கோயம்புத்தூர்  
   
போன்:
   
  + 91 - 422 - 267 2000, 267 7700. 
    
 பொது தகவல்:
     
 

அழகிய கோபுரம், மாடங்கள், மண்டபங்கள் அமையப்பெற்ற திருக்கோயில். 
     
 
பிரார்த்தனை
    
  விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதற்காகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இவை தவி வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சிதறு தேங்காய் போடுதல்,கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாத்துதல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன. இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இத்திருக்கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர் விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாகும். திருக்கோயில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மலர் மற்றும் மின் கட்டணம் போன்றவைகளும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது.

5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம். கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில். நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்புபெற்ற விநாயகர் திருத்தலம்.
 
     
  தல வரலாறு:
     
  மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டதாம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம் இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar