சித்திரைத் திருவிழா, ஆடி மற்றும் மார்கழியில் வரும் திருவிழாக்கள், புரட்டாசியில் நவராத்திரித் திருவிழா.
தல சிறப்பு:
நவராத்திரியின் 10ம் நாள் வாழை மரத்தில் வன்னிமர இலையை வைத்து, அதன்மீது அம்பு போடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில்
சிங்காநல்லூர், கோயம்புத்தூர்
பிரார்த்தனை
செல்லாண்டியம்மனுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், சிறந்த வாழ்க்கை துணை அமையும் என்பதும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால பூஜையில் கலந்து கொண்டு துர்கையை தரிசித்தால், காரியத் தடைகள் நீங்கும்; எதிரிகளின் தொல்லை ஒழியும் என்பதும் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
நவராத்திரிக்கு முதல்நாளன்று, முதல் படியில் கலசம் வைத்து இந்த வருடம் நவராத்திரிக்கு கொலு வைக்கலாமா? என அம்மனிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். அம்மன் ஆணையிட்டதால்தான், அந்த வருடம் கொலு வைபவம் நடைபெறும்! கொலு வைப்பதற்கு செல்லாண்டியம்மன் உத்தரவு தந்துவிட்டாள் எனில், ஸ்ரீவிநாயகரின் திருவுருவ விக்கிரகத்தை வைத்து, மங்கல வாத்தியம் முழங்க, கொலு வைபவம் துவங்கும்.
வீட்டில் கொலு வைக்க ஆசைப்பட்டு, ஆனால் இயலாதவர்கள், கோயிலில் வைக்கப்படும் கொலுவுக்கு தங்களால் முடிந்த பொம்மைகளை வாங்கித் தருகின்றனர். 10-ஆம் நாள், உக்கிரத்துடன் தேவி அசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது வாழை மரத்தில் வன்னிமர இலையை வைத்து, அதன்மீது அம்பு போடும் நிகழ்ச்சியைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரள்கின்றனர். அடுத்து, பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்கித் தவிப்பவர்களுக்கு, வாழைக்காயைப் பிரசாதமாகத் தருகின்றனர். இந்தக் காயைச் சமைத்துச் சாப்பிட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சேர மன்னர்களுக்கும், பாண்டிய தேசத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களுக்கும் அடிக்கடி போர் நடந்து கொண்டே இருந்தது. இதனால் இரண்டு தேசத்திலும் அதிகளவில் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பார்வதி செல்லாண்டியம்மனாக அவதரித்து இரு தேசத்திற்கும் இடையே போர் வராமல் தடுத்து நட்புறவை உண்டாக்கினாள் என தல வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:நவராத்திரியின் 10ம் நாள் வாழை மரத்தில் வன்னிமர இலையை வைத்து, அதன்மீது அம்பு போடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு.