சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். கொடியேற்றத்துடன் துவங்கும் இந்நிகழ்ச்சி சுமார் 15 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்கு அடுத்ததாக சங்கடஹர சதுர்த்தி விழா மிகவும் பிரத்யேகமான முறையில் அம்மனுக்கு படையலிட்டு, மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
மூலஸ்தானத்தில் அம்மன் சிலை வடிவிலும், சுயம்பு வடிவிலும் அமைந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6:30 மணி முதல் மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில்,
பேரூர் மெயின் ரோடு, ஜிவி நகர்
செல்வபுரம்,641026, கோவை.
போன்:
+91 9360909070
பொது தகவல்:
இக்கோயில் 1980ம் ஆண்டு சிறுவர்களால் நிறுவப்பட்டது. வடக்கு திசை நோக்கி, பேரூர் மெயின் ரோட்டில், மக்கள் எளிதில் வருவதற்கான சூழலுடன் இயற்கை சூழ்ந்தநிலையில் வேப்ப மரங்கள் நிறைந்துள்ள இடத்தில் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
கடன் பிரச்சனைகள் தீர்வதற்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேறும் பட்சத்தில், அவர்கள் கோயிலுக்கு வேண்டிய உபகரணங்கள் வாங்கி கொடுத்தும், வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் பால், நெய் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்கள் கொடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
மூலஸ்தானத்தில் அம்மன் சிலை வடிவிலும், சுயம்பு வடிவிலும் அமைந்திருப்பது சிறப்பு.
தல வரலாறு:
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சிறுவர்களால் ஒரு சின்ன செங்கலை வைத்து வழிபடத் துவங்கி, நாளடைவில் சிறு சிலையை வைத்து வழி பட்டனர். பின்னர் 10 ஆண்டுகளில் சிலை உருவம் மிகவும் ஜொலிக்கும் வகையில் காணப்பட்டதால், இதனை அனைவருக்கும் தெரிய வர, நான்கு பக்கமும் சுவர் எழுப்பி சிறு கோயிலாக அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலஸ்தானத்தில் அம்மன் சிலை வடிவிலும், சுயம்பு வடிவிலும் அமைந்திருப்பது சிறப்பு.
இருப்பிடம் : ரயில் நிலையத்திலிருந்து, டவுன்ஹால் வழியாக சிறுவானி சாலையில் சுமார் 5 கி.மீ. துõரத்தில் செல்வபுரம் உள்ளது. அங்கிருந்து தெலுங்குபாளையம் ஆஸ்பத்திரி பேருந்து நிலையம் அருகில் கோயில் அமைந்துள்ளது.