Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வேதாயுத சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வேதாயுத சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வேதாயுத சுவாமி
  உற்சவர்: முத்துக்குமாரர்
  தீர்த்தம்: சயிலோதக தீர்த்தம், ஞானதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காணார்சுணை, வள்ளி தீர்த்தம்.
  ஊர்: செஞ்சேரி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தமிழ்க்கடவுளான வேலாயுதசாமிக்கு தமிழ்ப்புத்தாண்டான சித்திரை முதல் நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஈசனுக்கு உகந்த ஆரூத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சனம் மற்றும் முருகனுக்குகந்த கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் சிறப்பு விழாக்களாகும். தேர்த்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து திரளான மக்கள் கலந்து கொள்வர்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் உள்ள திருமால் தனது வலது கையில் லிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது விசேஷமான தரிசனம். நவக்கிரக சன்னதியில் சூரியபகவான் மேற்கு நோக்கியிருக்க, பிற கிரகங்கள் அவரை நோக்கியபடி அமைந்துள்ளது. இத்தலத்தில் வேலாயுதர் 12 கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் சேவல் கொடியை வைத்திருப்பதோடு, இடது கையில் சேவலையும் வைத்திருக்கிறார்  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் இவ்வாலயத்தில் கால சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. 
   
முகவரி:
   
  அருள்மிகு வேலாயுதர் திருக்கோயில் செஞ்சேரி - கோயம்புத்தூர்.  
   
போன்:
   
  +91- 4255- 266 515, 268 515,268 415 
    
 பொது தகவல்:
     
 

தனிச்சன்னதியில் நடராஜர், சிவகாமியம்பாள் காட்சி தருகின்றனர். கைலாசநாதர், பெரிய நாயகி, விநாயகருக்கும் சன்னதிகள் உள்ளன.அருகிலேயே சக்தி மலை, திருமால் மலை, பிரம்மா மலை என்ற மூன்று மலைகள் இருக்கிறது.


அடிவாரத்தில் மலைப்படி துவங்கும் இடத்தில் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. 230 படிகள் கொண்ட மலைப்பாதை வழியாகச் செல்லும்போது குமரன், சப்தகன்னியர், இடும்பன் ஆகியோரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம். வாகனங்கள் மலைமீது செல்ல தனிப்பாதையும் உள்ளது. கோயிலில் நுழைந்ததும் கொடிமரத்தை யடுத்து மகாமண்டபம் உள்ளது.


 
     
 
பிரார்த்தனை
    
 

புதிதாக தொழில் தொடங்கவும், திருமணம் நடத்துவதற்காகவும் இங்கு முருகனிடம், "பூக்கேட்டல்' எனும் சடங்கை செய்கின்றனர்.


சஷ்டி விரதமிருந்து நெய் தீபமேற்றி இவரை வழிபட்டால் குழந்தை பாக்யம் நிச்சயம் என்கின்றனர். ஜாதக ரீதியாக பூர்வ புண்ணிய சாபம் உள்ளவர்கள் 11 பவுர்ணமியில் தாமரை மாலை சாற்றி மாதுளம் பழங்களை நைவேத்தியமாகப் படைத்து நெய் தீபமேற்றி வணங்கினால், அந்த சாபம் நீங்கும் என நம்புகின்றனர்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  கிரக தோஷம் உள்ளவர்கள் முருகனுக்கும், நவக்கிரக சன்னதியிலுள்ள சூரியனுக்கும் செவ்வரளி மாலை சாத்தி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
 


பெற்றோரை வணங்கும் முருகன்: இத்தலத்தில் வேலாயுதர் 12 கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் சேவல் கொடியை வைத்திருப்பதோடு, இடது கையில் சேவலையும் வைத்திருக்கிறார். சூரனை அடக்கி அவனை சேவலாக மாற்றி தன் பிடிக்குள் வைத்திருப்பதை இந்த அமைப்பு காட்டுகிறது. முருகன் இத்தலத்தில் தன் பெற்றோர்களை வணங்கி பின் போரில் வெற்றி கண்டார். இவரது மயில் வாகனம் வடக்கு நோக்கியிருக்கிறது. இத்தலத்தில் உள்ள திருமால் தனது வலது கையில் லிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது விசேஷமான தரிசனம். உற்சவர் முத்துக்குமாரர் வள்ளி, தெய்வானை மூவரும் பத்ம பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். அருணகிரியார் திருப்புகழில், சுவாமியைப் பற்றி பாடியுள்ளார்.


மந்திரி முருகன்: சிவனிடம் மந்திர உபதேசம் பெற்றவர் என்பதால் இத்தலத்தில் அருளும் வேலாயுதரை "மந்திர முருகன்', என்றனர். அதுவே காலப்போக்கில் மருவி "மந்திரி முருகன்' என்றாகி, "மந்திரியப்பன்' என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. இவரை பக்தர்கள் தங்களது கஷ்டங்களுக்கு ஆலோசனை சொல்லும் மந்திரியாக கருதுகின்றனர். இப்பகுதியில் பிறக்கும் குழந்தைக்கு "மந்திரி' என்ற பெயரை வைக்கும் பழக்கமும் இருக்கிறது. மந்திர உபதேசம் செய்த மலை என்பதால் இம்மலையை "மந்திராசலம்', "மந்திரகிரி' என்றும், முருகனுக்கு அருள் செய்வதற்காக சிவபெருமான் தென்திசை வந்து இங்கு வீற்றிருப்பதால் "தென்சேரிகிரி' என்றும் அழைக்கின்றனர்.


அருணகிரிநாதர் இம்முருகனை, செஞ்சேவல் செங்கையுடைய சண்முகத்தேவே.. எனத் திருப்புகழில் புகழ்ந்துள்ளார். மாணிக்கவாசக சுவாமிகள், மந்திர மாமலை மேயாய் போற்றி.. என இத்தல ஈசனை திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார். முப்பெரும் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்ட இரண்டாயிரம் ஆண்டு பழமையான திருத்தலம். சுற்றியுள்ள 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் வேலாயுதசுவாமியிடம் பூப்போட்டு உத்தரவு பெற்ற பின்னரே தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவரது அருட்பார்வையினால் மலையைச் சுற்றியுள்ள ஊர்களில் விவசாயம் செழித்தோங்குகிறது. மலை மீதிருந்து எத்திசையில் பார்த்தாலும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல அமைந்துள்ள தென்னந்தோப்புகளே அதற்குச் சாட்சி. ஊர் மக்கள், கறந்த பாலும், பிறந்த முடியும் இந்த முருகனுக்குத்தான். சத்ரு சம்ஹார மூர்த்தியாய் எங்களை காத்தருள்கிறார் என்று இந்த முருகனைப் புகழ்கிறார்கள்.


 
     
  தல வரலாறு:
     
  ஒரு சமயம் கயிலையில் வீற்றிருக்கும் நந்திதேவரிடம், மந்திரகிரியின் சிறப்புகளை எடுத்துரைக்குமாறு மார்க்கண்டேயன் வினவ, அவர் கூறலானார்; சூரபத்மன் என்ற அரக்கன் கடுமையான தவமிருந்து ஈசனிடமிருந்து பெற்ற வரத்தினால் தேவர்களுக்கும் மக்களுக்கும் துன்பம் கொடுத்து வந்தான். இதையறிந்த ஈசன், சூரனை அடைக்கும் பொருட்டு கார்த்திகேயனைப் படைத்தார். ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி, சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த கார்த்திகேயனை பின்னர் கயிலைக்கு அழைத்து வந்தனர். தன் அவதார நோக்கத்தை தந்தையிடம் கேட்டுக்கொண்ட முருகன், சூரபத்மனையும் அரக்கர்களையும் அழிக்க, தேவசேனைகளுக்குத் தலைமை தாங்கிப் புறப்படத் தயாரானான். அடிவாரத்தில் வாமதேவர் தவக்குடில் உள்ளது. இங்கு வியாசர், அத்திரி, கலைக்கோட்டு முனிவர், குச்சிகன், கேரிகோசிகன், அகத்தியர் போன்றோர் தவம் புரிந்திருக்கிறார்கள். ஒருமுறை நாரதர் இக்குடிலுக்கு விஜயம் செய்தபோது, யார் தவத்தில் சிறந்தவரோ.. அவருக்கு என் வணக்கம்! என்றார். தவத்தில் சிறந்தவர் அகத்தியர். எனவே நாரதரின் வணக்கம் அவருக்கே உரியது என அனைவரும் நம்பினர். ஆனால் வியாச முனிவரோ இக்கூற்றை ஏற்க மறுத்து, அகத்தியனைவிட யாமே தவத்தில் சிறந்தவன் என இருமாப்புக் கொண்டார். அப்போது ஈசன் அங்கு தோன்றி அகத்தியரே சிறந்த தவசீலர் என உரைத்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்து மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். தவத்தை மெச்சிய ஈசன், அகத்தியரின் விருப்பப்படி, சயிலோகத் தீர்த்தம் எனும் சுனையை ஏற்படுத்தி, இங்கு நீராடுபவர்களின் பாவம் அறவே நீங்கி அருள்பெறுவர்! என ஆசி கூறினார். என்றும் வற்றாத இச்சுனை ஞானத் தீர்த்தம் என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. கோயிலின் வடக்குப் பகுதியில் உள்ள இத்தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் மனநோய், தீய சக்திகளின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் வேலாயுதர் 12 கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் சேவல் கொடியை வைத்திருப்பதோடு, இடது கையில் சேவலையும் வைத்திருக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar