பதிவு செய்த நாள்
15
நவ
2019
01:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ 28ல் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் துவங்குகிறது. டிச.,1ல் கொடியேற்றம் நடைபெறுகிறது. டிச.,10ல் மகா தீப தரிசனம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
28.11.2019 -இரவு: அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம் -காமதேனு வாகனம்
29.11.2019 -இரவு: அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம் - சிம்ம வாகனம்
30.11.2019 - இரவு: அருள்மிகு விநாயகர் உற்சவம் - வெள்ளி மூஷீக வாகனம் -சண்டிகேசுவரர் ரிஷப வாகனம்
01.12.2019 விடியற்காலை 5.30 மணிக்குமேல் 7.05 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் காலை: பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள் இரவு: பஞ்சமூர்த்திகள் -வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச வாகனம்
02.12.2019 - காலை: விநாயகர், சந்திரசேகரர் - தங்க சூரியபிரபை வாகனம் இரவு : பஞ்சமூர்த்திகள் - வெள்ளி இந்திர விமானம்
03.12.2019 காலை: விநாயகர், சந்திரசேகரர் -பூத வாகனம் இரவு: பஞ்சமூர்த்திகள் -சிம்ம வாகனம் -- வெள்ளி அன்னவாகனம்
04.12.2019 காலை: விநாயகர், சந்திரசேகரர் -நாக வாகனம் இரவு: பஞ்சமூர்த்திகள் -வெள்ளி காமதேனு கற்பக விருட்ச வாகனம்
05.12.2019 காலை: விநாயகர் சந்திரசேகரர் -கண்ணாடி ரிஷப வாகனம் இரவு: பஞ்சமூர்த்திகள் - வெள்ளி பெரிய ரிஷப வாகனம்
06.12.2019- காலை: விநாயகர் சந்திரசேகரர் -வெள்ளி யானை வாகனம்- 63 நாயன்மார்கள் வீதி உலா. இரவு: பஞ்சமூர்த்திகள் -வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்
07.12.2019 -காலை: 7.05 மணிக்குள் 8.05 மணிக்குள் தனுர் லக்னத்தில் அருள்மிகு விநாயகர் தேர்வடம் பிடித்தல் பஞ்சமூர்த்திகள் - மகாரதங்கள் -தேரோட்டம்
08.12.2019 காலை: விநாயகர், சந்திரசேகரர் - குதிரை வாகனம் மாலை: 4.00 மணிக்கு பிட்சாண்டவர் உற்சவம் இரவு: பஞ்ச மூர்த்திகள் -குதிரை வாகனம்.
09.12.2019 -காலை: விநாயகர், சந்திரசேகரர் - புருஷா முனி வாகனம் இரவு: பஞ்சமூர்த்திகள் -கைலாச வாகனம், காமதேனு வாகனம்
10.12.2019 - அதிகாலை: 4.00 மணிக்கு பரணி தீபதரிசனம் மாலை: 6.00 மணிக்கு - மகா தீப தரிசனம் இரவு : பஞ்சமூர்த்திகள் - தங்க ரிஷப வாகனம்
11.12.2019 இரவு: 9.00 மணிக்கு அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல்.
12.12.2019 அதிகாலை: அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருள்மிகு அண்ணாமலையார் (அருள்மிகு பெரியநாயகர்) கிரிப்பிரதக்ஷ்ணம். இரவு 9.00 மணிக்கு அய்யங்குளத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தெப்பல்
13.12.2019 இரவு 9.00 மணிக்கு அய்யங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல்
14.12.2019- இரவு: அருள்மிகு சண்டிகேஸ்வரர் -வெள்ளி ரிஷப வாகனம்.