Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வீடு கட்டும் யோகம் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சுபநிகழ்ச்சி நடந்தேறும் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » மார்கழி ராசிபலன் (17.12.2019 முதல் 14.1.2020 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அரசின் சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
10:50

இந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரை சாதக பலனை கொடுப்பார். சூரியன், புதன், ராகு நன்மை அளிப்பர். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் ஏற்படாது. பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வீண் விரயம் இனி இருக்காது. ராகு முயற்சியில் வெற்றி தருவார்.

பண வரவு அதிகரிக்கும்.  சொந்தபந்தம் வருகையால் மகிழ்ச்சி கூடும். எதிர்கால முன்னேற்றம் கருதி புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள்  அனுகூலமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். செவ்வாயால் அண்டை வீட்டாரின் தொல்லை ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. 

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.  சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். உடல் நலம் பெறும்.

சிறப்பான பலன்கள்:

தொழிலதிபர்கள் முன்னேற்றம் பெறும் மாதமாக இது அமையும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்களின் ஆற்றல் மேம்படும்.
தரகு, கமிஷன் தொழில் செய்பவர்கள் தடைகளை  முறியடித்து முன்னேற்ற பாதையில் செல்வர்.

அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். வேலைப்பளு குறையும்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் அடைவர். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். முக்கிய கோரிக்கை நிறைவேறும். புதன் சிறப்பாக இருப்பதால்  பின்னடைவு மறையும். ஐ.டி., துறையினர் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும். மதிப்பும் காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும். வக்கீல்களுக்கு எதிர்பாராத வகையில் வருமானம் வரும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும்.  கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர்.
விவசாயிகள் பாசிப்பயறு, நெல், உளுந்து, பழவகைகள் மூலம் வருமானம் காண்பர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. பள்ளி மாணவர்கள் மாத முற்பகுதியில் புதன் சாதகத்தால் முன்னேற்றம் அடைவர்.  போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

சுமாரான பலன்கள்:

ஐ.டி. துறையினருக்கு நவ.22க்கு பிறகு வேலைப்பளு  அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். மருத்துவர்களுக்கு வீண்விரயம், அலைச்சல் ஏற்படலாம். ஆசிரியர்களுக்கு திடீர் செலவால் பணப்பற்றாக்குறை உருவாகும். சக ஊழியர்களால் தொல்லைக்கு ஆளாவர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் கவனமுடன் பணிபுரியவும். அரசியல்வாதிகள் அலைச்சல், உடல்நலக்குறைவுக்கு ஆளாவர். எதிரி தொல்லை வரலாம் கலைஞர்கள் நவ.22க்கு மறைமுகப் போட்டியை சந்திப்பர். சிலருக்கு அவப்பெயர் உருவாகலாம். விவசாயிகள் புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க நேரிடும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். கல்லூரி மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  ஆசிரியரின் அறிவுரையை பின்பற்றுவது அவசியம்.

* நல்ல நாள்: நவ.17,18,19, 24, 25,26,27, டிச.1,2, 6,7,13,14,15,16
* கவன நாள்: நவ.20,21 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: வெள்ளை, பச்சை

* பரிகாரம்:
●   வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை

 
மேலும் மார்கழி ராசிபலன் (17.12.2019 முதல் 14.1.2020 வரை) »
temple
நல்ல மனம் படைத்த மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாத தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொன், ... மேலும்
 
temple
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 8ல் இருக்கும் ... மேலும்
 
temple
மதிநுட்பம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் டிச.21 வரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான ... மேலும்
 
temple
கடமை உணர்வு மிக்க கடக ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. ... மேலும்
 
temple
புதுமை எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 11ல் இருக்கும் ராகுவால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.