Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்:  (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) தம்பதி ஒற்றுமை மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சுபநிகழ்ச்சி நடந்தேறும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சுபநிகழ்ச்சி நடந்தேறும்

பதிவு செய்த நாள்

16 நவ
2019
10:11

இந்த மாதம் நவ.22ல் சுக்கிரனும், டிச.3ல் புதனும்  இடம் மாறி நற்பலன் கொடுப்பர். குரு, சனி, கேது மற்றும் சூரியனால் நற்பலன் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்குக்கு குறை இருக்காது. பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.  நினைத்த காரியம் நிறைவேறும்.

குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், நிம்மதியும் மனதில் இருக்கும்.  மாத முற்பகுதியில் பெண்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். கணவன், மனைவி இடையே அன்பு தொடரும். நவ.22க்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தம் வருகையால் நன்மை ஏற்படும். டிச.2க்கு பிறகு நண்பர்களின் ஆதரவால் நன்மை காண்பீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியாக காணப்படுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்கி குவிப்பர். சகோதரவழியில் உதவி கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர். ஆரோக்கியம் குறையலாம்.

சிறப்பான பலன்கள்:

தொழிலதிபர்கள்  டிச.2க்கு பிறகு கூடுதல் லாபம் காண்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில்  வளர்ச்சி அடையும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக ஆதாயத்தை எதிர்பார்க்கலாம்.
வியாபாரிகள் சீரான வளர்ச்சி பெறுவர். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.2க்கு பிறகு அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.

ஐ.டி., துறையினர் நவ.22க்கு பிறகு நற்பலனை எதிர்பார்க்கலாம். 


மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் காண்பர். புதிய முயற்சியில் தைரியமாக  நடத்தி வெற்றி காண்பர்.  வக்கீல்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
ஆசிரியர்கள் பணியில் சிறந்து விளங்குவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டிகள் முதலியன நவ.22க்கு பிறகு மறையும். அதன் பிறகு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும்.


அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். தொண்டர்களின் மத்தியில் அந்தஸ்து பெறுவர். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். நெல், கோதுமை சோளம், பழ வகைகள் மூலம் அதிக லாபத்தை காண்பர்.  பள்ளி மாணவர்கள்  டிச.2 க்கு பிறகு போட்டிகளில் வெற்றி காண்பர். நல்ல மதிப்பெண் கிடைக்க பெறுவர். கெட்ட சகவாசத்திற்கு விடை கொடுப்பர்.  கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று முன்னேறுவர்.

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்கள் டிச.2 வரை சிலர் தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயருக்கு ஆளாகலாம். வியாபாரிகள் புதிய முதலீட்டு விஷயத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அரசு வேலையில் இருப்பவர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.2-ம் தேதி வரை குழப்பத்திற்கு ஆளாவர்.


ஐ.டி. துறையினர் முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.  போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு முயற்சிகளில் தடைகளைச் சந்திப்பர். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களுக்காக செலவு செய்ய நேரிடும். அவ்வப்போது மனதில் இனம் புரியாத வேதனை ஏற்படலாம். விவசாயிகளுக்கு வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும்.

* நல்ல நாள்: நவ.18,19,20, 21,26,27,28,29,30, டிச.3, 4,5,8,9,10,15,16
* கவன நாள்: நவ.22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:2,9
* நிறம்:சிவப்பு, மஞ்சள்

* பரிகாரம்:

●  செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை
●  சனிக்கிழமையில் ராமருக்கு துளசிமாலை
●  சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar