பதிவு செய்த நாள்
17
ஏப்
2012
10:04
சேலம் : சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலில், ஏழு லட்சத்து, 50 ஆயிரத்து, 741 ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும், தங்கம், 39 கிராமும், வெள்ளி, 195 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உள் பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் கோவில் வளாகங்களில் மொத்தம் பத்து உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அம்மனிடம் பல்வேறு வேண்டுதல் வைத்து நிறைவேறும் பக்தர்கள், அம்மனுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவர். பல்வேறு விழாக்காலங்களில் அம்மனை வழிபட வரும் பக்தர்களும் உண்டியல் காணிக்கை செலுத்துவர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால், இரண்டு மாத்துக்கு ஒருமுறை எண்ணப்படும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, ஆறு லட்சம் ரூபாய் வசூலானது. நேற்று கோவிலில் உள்ள பத்து உண்டியல்கள், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வரதராஜன், சுகவேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் உமாதேவி ஆகியோர் முன்னிலையில் திறந்து, எண்ணப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் தன்னார்வளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோவில் உண்டியல்கள் மூலம், ஏழு லட்சத்து, 50 ஆயிரத்து, 741 ரூபாய் வசூலானது. மேலும், பக்தர்கள், 39 கிராம் தங்க நகை, 195 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.