Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள் மலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து ... அடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம் அடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
13:17

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினர்.

சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆ னந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில் தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்மதீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரீரி கூறிய து.அதைக்கேட்ட பார்வதிதேவி மன மகிழ்ச்சியுடன் பிர்ம்மதீர்த்தத்தில் மூழ்கியெழுந்து மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றார். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வே ண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வரவேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அ ழைக்கப்பட வேண்டும்.

நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு பாவங்களை போக்கி அருள்பாலிக்க வேண்டும் என்றார் என்பது ஐதீகம். இத னை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நகிழ்ச்சி நடைபெறும். அதேபோல் இவ்வாண்டு கடந்த அக்டோபர் 18ம் தேதி துலா உற்சவ தொடக்க தீர்த்தவாரியும். 27ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும் நடந்தது. அதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் கடைசி பத்துநாள் உற்சவம் தொடங்கி 13ம் தேதி திருக்கல்யாணமும், 15ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று கடைமுகதீர்த்தவாரி உற்சவம் நடந்தது.  அதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீன த்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானே ஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர். தெற்கு கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் முன் னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று. மதியம் 3:45 மணியளவில் சுவாமி தீர்த்தம் கொடுக்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.  இதில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சா ரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பதி: திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள  அறக்கட்டளைக ளுக்கு பக்தர்கள் ... மேலும்
 
temple
சென்னை: தமிழகத்தில் இருந்து, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்  வசதிக்காக, ஆண்டுதோறும், அறநிலையத் ... மேலும்
 
temple
திருப்புல்லாணி:-திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் சமேத பத்மாஸனித்  தாயார் கோயில் வைணவத் ... மேலும்
 
temple
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத  சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குமாரகோயிலுக்கு கார்த்திகை  மாத கடைசி வெள்ளியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.