Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ... சபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி மறுப்பு சபரிமலை கோவில்: பெண்களுக்கு அனுமதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
13:26

 புதுடில்லி: அடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அயோத்தி விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைப்பதாக சமீபத்தில் இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என அனுமதி அளித்தது. 3 மாதங்களில் டிரஸ்ட் அமைத்து, ராமர் கோயில் பணிகளை துவக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூறி இருந்தது. இதனையடுத்து கோர்ட் வழிகாட்டுதலின் பேரில் டிரஸ்ட் அமைக்கும் பணியை மத்திய அரசு துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ராமர் கோயில் கட்டும் பணிகளையும் விரைவாக துவக்கவும், தாங்கள் வாக்குறுதி அளித்தபடி பிரம்மாண்ட ராமர் கோயில் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மகர சங்கராந்தி அன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2022ம் ஆண்டு உ.பி., தேர்தல் சமயத்தில் கோயில் பணிகளை முழுமையாக முடிக்க உ.பி., திட்டமிட்டுள்ளது. இதனால் ராமர் கோயில் அமைப்பதற்கு உள்ள அனைத்து தடைகளையும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நீக்கி வருவதாக கூறப்படுகிறது. 1989 ம் ஆண்டு முதல் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பு வடிவமைத்த வடிவிலேயே கோயிலை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் கட்டுவதற்கு தேவையான பொருட்களை சேகரிக்கும் பணியை விஷ்வ இந்து பரிஷித் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இருந்து இந்து அமைப்புக்கள் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான செங்கல்கள், ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பதி: திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள  அறக்கட்டளைக ளுக்கு பக்தர்கள் ... மேலும்
 
temple
சென்னை: தமிழகத்தில் இருந்து, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்  வசதிக்காக, ஆண்டுதோறும், அறநிலையத் ... மேலும்
 
temple
திருப்புல்லாணி:-திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் சமேத பத்மாஸனித்  தாயார் கோயில் வைணவத் ... மேலும்
 
temple
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத  சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குமாரகோயிலுக்கு கார்த்திகை  மாத கடைசி வெள்ளியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.