பதிவு செய்த நாள்
18
நவ
2019
03:11
கிருஷ்ணகிரி: சபரிமலை செல்லும் பக்தர்கள், கார்த்திகை, 1ல், மாலை அணிவது வழக்கம். இதையொட்டி, நேற்று (நவம்., 17ல்) காலை கிருஷ்ணகிரி -சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
ஐயப்பன் கோவில் குருசாமி சிவதாஸ், பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார். தொடர்ந்து, 45 நாட்கள் நடக்கும் ஐயப்பன் கோவில் மண்டல பூஜையும் நேற்று துவங்கியது. இதையொட்டி, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். தொடர் ந்து, பஜனை நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
* கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு நேற்று (நவம்., 17ல்) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பலர், சபரிமலைக்கு மாலை அணிந் தனர். திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னதியில் உள்ள ஐயப்பன் சுவாமி முன், ஏராள மான பக்தர்கள், சபரிமலை செல்ல மாலை அணிந்தனர்.
தொடர்ந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். நேற்று (நவம்., 17ல்) விடுமுறை நாள் என்பதால், கர்நாடகா, மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.