பதிவு செய்த நாள்
18
நவ
2019
03:11
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மை தானத்தில், கனகஜோதி சேவா சமிதி சார்பில், கவி கனகதாசர் ஜெயந்தி விழா நேற்று (நவம்., 17ல்) நடந்தது.
முன்னதாக, தேன்கனிக்கோட்டை வெங்கடப்பா திருமண மண்டபத்தில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் மைதானம் வரை, குருபர் கலாசார கலை நிகழ்ச்சிகளான டொல்லு, குணிதா, வீரகாசை, வீரபத்திர குணிதை ஆகியவற்றுடன், பெண்கள் கும்ப கலசத்துடன் ஊர்வலமாக சென்றனர். அதேபோல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கனகதாசர் பல்லக்கு உற்சவம் நடந்தது.
தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் மைதானத்தில், கங்கை பூஜை, கனகதாசர் படத்திற்கு புஷ்ப அர்ச்சனை மற்றும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பல நாட்கள் விரதமிருந்த பக்தர்கள், ஒவ்வொருவராக வந்து, தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா திடலில், பக்தர்கள் பலர் ரத்த தானம் செய்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.