பதிவு செய்த நாள்
19
நவ
2019
02:11
சூலுார்:கார்த்திகை மாதப்பிறப்பை ஒட்டி, காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில், ஏராள மான பக்தர்கள், மாலை அணிந்து கொண்டனர்.மண்டல கால பூஜைக்காக, சபரிமலை சன்னி தானத்தின் நடை நேற்று முன்தினம் (நவம்., 17ல்)திறக்கப்பட்டது.
இதையடுத்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், கார்த்திகை மாதப்பிறப்பான, நேற்று (நவம்., 18ல்) காலை, மாலை அணிந்து கொண்டனர்.
சூலுார் அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் மற்றும் சுற்றுவட்டார கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர்.
காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில் நேற்று (நவம்., 18ல்) அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டு, மாலை அணிந்து கொண்டனர்.